ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை, நவ. 14- ஒன்றிய அரசின் ஆடை வடிவமைப்பு (நிஃப்ட்) கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. 

ஒன்றிய அரசின் தேசிய ஃபேஷன் டிசைனிங் கல்வி நிறுவனத்தில் (நிஃப்ட்) ஃபேஷன் வடிவமைப்பு, அணி கலன் வடிவமைப்பு உள்ளிட்ட இளநிலை, முதுநிலை படிப் புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாதமும், அடுத்த தாக நேரடி தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற உள்ளன.


No comments:

Post a Comment