குமரி மாவட்டத்தில்.... ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

குமரி மாவட்டத்தில்.... ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம்

நாகர்கோவில், நவ.28 நாகர்கோவில் ஒழுகினசேரி  பெரியார் மய்யத்தில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்  மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினர். 

மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித் தனர் 

மாவட்ட ப.க. தலைவர் உ.சிவதாணு, திராவிட நட்புக் கழக பொறுப்பாளர்கள் முனைவர் ஆனந்த், விஷ்ணு ஆகி யோர்  கருத்துரை வழங்கினர். கழகச் சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீர மணி சிறப்புரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது கடவுள் மறுப்புக் கூறினார். கழக கலை இலக்கிய அணி மாவட்ட செய லாளர் பா.பொன்னுராசன்  வரவேற்புரை நிகழ்த்தினார். 

கழக மாவட்ட இளைஞரணி செய லாளர் ச.அலெக்சாண்டர், அமைப் பாளர் மு.இராஜசேகர், மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் ச.ச.கருணா நிதி,  திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.கோகுல், ஒன்றிய அமைப் பாளர், செல்லையன், மேலராமன் புதூர்  கிளைக்கழக அமைப்பாளர் பி.கென் னடி மகளிரணி தோழர் ச.ச.மணி மேகலை, வழக்குரைஞர் அப்பாஜி, 

சி. காப்பித்துரை, திமுக மாவட்ட மாண வரணி துணை அமைப்பாளர் ஆன்டனி ராஜ் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். 

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மறைந்த போராளிகளுக்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் 1000 வினா-விடைப் போட் டிக்கு ஒத்துழைத்த தோழர்கள் அனை வருக்கும் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். கழக கன் னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment