மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்

நாம் தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க 7 முதல் 8 மணி நேர சீரான உறக்கம் தேவை. இரவு நீண்ட நேரம் கண் விழித்தால், உடல் மட்டுமில்லாமல் மனநலமும் பாதிக்கப்படும். மனது இறுக்கமாக இருக்கும் நேரங்களில், நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மசாலா நிறைந்த உணவு, எண்ணெய்யில் பொரித்த உணவு, அதிக அளவிலான உணவு ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

நடனம் ஆடுவது மட்டுமல்ல, புதிய புதிய தகவல்களைக் கேட்பது, பகுத்தறிவோடு சிந்திப்பது, முற்போக்குச்சிந்தனையுடன் நண்பர்களோடு அள வளாவுவது போன்றவை மனஅழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

 புதிய சிந்தனைகள் தேடுதலின் துவக்கம் ஆகும், மதவாதம் என்றுமே நம்மை புதிய சிந்தனைக்கு கொண்டுசெல்லாது, தேனீர், காபி கண்டுபிடித்த சீனா தான் காகிதமும், வெடிமருந்தும் கண்டுபிடித்தது, சீனா உலகின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நாடு என்று கூட சொல்லலாம். அங்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு கணித முறை இருந்துள்ளது, மத்திய கிழக்கு சீனாவில் அகழாய்வின் போது ஆமை ஓட்டின் உள்பகுதியில் சில கணித முறைகளை எழுதி வைத் திருந்ததைக் கண்டறிந்தனர். அந்த கணக்கீடுகள் நீண்ட தூரப்பயணம் தொடர்பானவைகள் என்று கூறப்படுகிறது. 

 அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கள் நீண்ட தூரப் பயணங்கள் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் சிந்தித்துள்ளனர். நீண்ட தூரப்பயணம் என்றாலே புதிய கண்டுபிடிப்புகள் புதிய இடங்கள் தொடர்பானவைகள்தான், இதனால் தான் சீனர்கள் இன்றும் உலகம் எங்கும் வணிகத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் சிறந்துவிளங்குகின்றனர். 

 மேலை நாடுகள் 12 ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்புகளில் நுழையும் போது அவர்களுக்கு சீனர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் கைகொடுத் தது, இதில் மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும் நடைமுறைதான் அனைத்திற்கும் முன் னெடுப்பாக உள்ளது.


No comments:

Post a Comment