டிசம்பர் 7இல் நாடாளுமன்றக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

டிசம்பர் 7இல் நாடாளுமன்றக் கூட்டம்

புதுடில்லி, நவ 13- நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம் பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.

இமாச்சலம் மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் காரண மாக குளிர்காலக்கூட்டத் தொடர் வழக்கமான காலத்தை விட்டு சற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொடரைத் தொடங்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமானப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் தற்போதுள்ள கட்டடத்திலேயே இந்தக்கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

நடப்பு ஆண்டிற்கான நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள  நிலை யில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ள தால் அவர் கூட்டத்தொடரில் பங் கேற்க மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment