ஜார்க்கண்டில் இடஒதுக்கீடு 77 விழுக்காடு: 9 ஆவது அட்டவணையில் சேர்க்க முனைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

ஜார்க்கண்டில் இடஒதுக்கீடு 77 விழுக்காடு: 9 ஆவது அட்டவணையில் சேர்க்க முனைப்பு

ராஞ்சி, நவ.12 ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதி கரிக்க வகை செய்யும் மசோதா நேற்று (11.11.2022) அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அர சமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்ட வணையில் சேர்க்க ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் டில்லிக்கு விரைகிறார்

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக உள்ளது அத்துடன் அரச மைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்ட வணையில் இதற்கான சட்டம் சேர்க் கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என் கிற நிலைமை உள்ளது.  தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன் றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னொரு பக்கம், தமிழ் நாட்டைப் பின்பற்றி இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கும் நடவடிக்கை களை மாநிலங்கள் மேற்கொண்டும் வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 ஆண்டு களுக்கு முன்னர் சட்டப்பேரவை தேர் தல் நடைபெற்றது. அப்போது மாநிலத் தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை இன்று ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்த இடஒதுக்கீடு அளவை 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டைப் போலவே தங் களின் 77% இடஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9 ஆவது அட்ட வணையில் சேர்க்கவும் அம்மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற் போதைய இடஒதுக்கீடு: தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு- 10%; பழங்குடியினருக்கு 26%; இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினருக்கு14%; ஆண்டுக்கு 60 லட்சம் வருவாய் பார்க்கும் பார்ப்பனர் ஏழை மக்களுக்கான - 10% இந்த இடஒதுக்கீடு அளவு மாற்றப்பட்டுள்ளது. 

புதிய இட ஒதுக்கீட்டின்படி தாழ்த் தப்பட்டபிரிவிற்கு- 12%; பழங்குடியினருக்கு-28%; இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு-27%; இடபிள்யூஎஸ்- 10% இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரித்துள்ளது.அண்மையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படு கின்றன. இந்த தீர்ப்பின் போது, மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகக் கூடாது என்ற தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆகையால் 50% இடஒதுக்கீட்டு வரம்பை உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மீறுகிறது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் வைக்கவும் இல்லை. இது ஒருவகையில் மாநிலங்கள் இடஒதுக்கீடு அளவை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வை யாளர்கள்.

No comments:

Post a Comment