அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்? 50 ஆண்டுகள் பின்னோக்கி அமெரிக்கா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்? 50 ஆண்டுகள் பின்னோக்கி அமெரிக்கா?

அமெரிக்காவில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கீழவையில் உள்ள 425 இடங்கள் மற்றும் மூன்றில் ஒரு பங்குக்கு, இந்த முறையோ 35  மேல் அவை உறுப்பினர்கள் மற்றும் பல மாநில ஆளு நர்கள், மற்றப்  பொறுப்பாளர்கள் முதல் பள்ளி நிர் வாகப் பொறுப்பாளர்கள் வரை  தேர்தல் நடக்கும் . அமெரிக்க  தலைவர் அவர் பதவியில்  நான்காண்டு களிலே இரண்டாண்டுகள் தாண்டியிருப்பார். அதனால் இதை இடைக் காலத் தேர்தல் என்றழைப்பார்கள் .

மேலவையில் 50 - 50 என்று இரு கட்சியினரும் இருப்பதாலும், கீழவை மாற்றம் என்பதாலும் இத்தேர்தல் முக்கியமான  தேர்தல் ஆகி விட்டது. குடியரசுக் கட்சி எதிர் பார்த்த அளவு அதுவும் முக்கியமாகப்  பழைய தலைவர் டிரம்ப் தன்னால்  தான் எல்லாம் என்று சொல்லிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மக்களாட்சிக் கட்சிக்குப் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. கடும் போட்டியில் ஓரளவு சமாளித்தாலும் பெரும்பான்மையை இழக்கும் வாய்ப்புத் தான் தெரிகின்றது. அது அவர்களின், முக்கியமாகத் தலைவர் பைடனின் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும்.

கீழவை, மேலவைத் தீர்மானங்கள் கொண்டு வந்துதான், அதற்காகும் செலவினத்தை ஒப்புக் கொண்டபின்தான் தலைவர் பைடன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஒதுக்கலாம் . அவ்வாறாகச் சட்டங்கள் கொண்டு வர முடியாது.

மிகவும் முக்கியமாக வாழ்நாள் நீதிபதிகளை நியமித்து மேலவையின் ஒப்புதல் பெற வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கப்போகின்றது.

பல மக்கள் நலத்  திட்டங்களுக்கு எதிரானவர்கள் குடியரசுக் கட்சியினர். செல்வந்தர்களுக்கு ஆதர வாகத் தான் செயல் படுவார்கள் . ஏழை மக்கள் பயன் பெறுவது கடினம்.

எந்தத் திட்டத்தையும் ஓழுங்காகச் செயற்படுத்த முடியாவிட்டால் அடுத்த இரண்டாண்டில் தலைவர் தேர்தல் வரும் போது வெற்றி பெறுவது கடினம் .

ஆகவே அமெரிக்கா இன்னும் கடுமையான காலத்தை நோக்கியே நகர்ந்துள்ளது .

50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லப் போகின் றோம் என்கிறார் பழைய தலைவர் பராக் ஒபாமா !

- ஒரு தனி செய்தியாளர்


No comments:

Post a Comment