தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை

சென்னை, நவ.14 தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் செய்தி யாளர்களிடம் நேற்று (13.11.2022) கூறியதாவது:

வட தமிழ்நாட்டின் உள் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், வட கேரள கடற்பகுதிக்கு நகர்ந்துள்ளது. 

தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவ. 13ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிக கனமழையும், 32 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.

தற்போது கேரளா - தமிழ்நாடு இடையே வளி மண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 14ஆம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், நவ.15ஆம் தேதி சில இடங்களிலும், நவ. 16, 17ஆம்தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 14ஆம் தேதி லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிக கனமழை, 32 இடங்களில் கனமழை பெய்துள்ளது.




No comments:

Post a Comment