ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை என்.எம்.எம்.எஸ். நுழைவுத் தேர்வு- விண்ணப்பிக்க நவ.30வரை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை என்.எம்.எம்.எஸ். நுழைவுத் தேர்வு- விண்ணப்பிக்க நவ.30வரை நீட்டிப்பு

ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம் எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு இணையவழியில் விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழை வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்ய் படுகிறார்கள். இதில், தமிழ்நாட்டுக்கான மாணவர் ஒதுக்கீட்டு எண்ணிக்கை 6,695 ஆகும். இவ்வாறு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப் படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிதாகவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் பதிவுசெய்ய வேண்டும். 

அந்த வகையில், நடப்பாண்டு என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இணையம் மூலம் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஷ்ஷ்ஷ்.sநீலீஷீறீணீக்ஷீsலீவீஜீs.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment