நவ.19இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

நவ.19இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, நவ. 17- இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வரும் 19ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படப் போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங் கடாச்சலம் கூறியதாவது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946ஆம் ஆண்டு தொடங் கப்பட்டதில் இருந்து வங்கி ஊழி யர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதி யம், வேலை ஒப்பந்தம், வாடிக்கை யாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், பின்னாளில் சில வங் கிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த 2005ஆம் ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் - இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே ஓர் ஒப் பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் படி, எந்த வங்கிக் கிளைகளில் கூடு தல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை, ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கிக் கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம், அனைத்து கிளைகளிலும் சமமான ஊழி யர்கள் இருப்பார்கள். சில வங்கி கள் இந்த ஒப்பந்தத்தை மீறி, ஊழி யர்களை வெளியூர்களுக்கு இட மாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். பணம் கொண்டு செல்லும் ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக அயல்பணி மூலம் தனியாருக்கு வழங்க சில வங் கிகள் முடிவு செய்துள்ளன. ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர் களை பணிநீக்கம் செய்ததுடன், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வேலை நிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தாக்கீது வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 5ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. பின்னர், டில்லியில் தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணை யருடன் கடந்த 10ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், தலைமை தொழி லாளர் நலத் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று, தற்போது  வங்கிகள் கூட்டமைப்புடன் மும் பையில் மீண்டும் ஒரு சுற்று பேச்சு நடந்தது. இதில், எங்களது கோரிக் கைகளுக்கு தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந் துள்ளது. 

எனவே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட் டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள் ளது. 

இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment