கரோனாவால் இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

கரோனாவால் இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் மூடல்

புதுடெல்லி, நவ.21 கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் 14 விழுக்காடு சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. 

நாடு முழுவது கரோனா பாதிப்பு வேகமாக பரவியதையடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை ஒன்றிய அரசு அறிவித்தது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டனர். ஆயிரக் கணக்கான சிறு, குறு, நிறுவனங்கள் தொழிலை நடத்த முடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டன. ஊரடங்கால் இந்தியா பொருளாதார இழப்பை எதிர் கொண்டது. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் 14 விழுக்காடு சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. தொழில்முனைவோர்களுக்கான உலகளாவிய கூட்டணி அமைப்பு (கேம்), கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தொழில்துறை எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 14 விழுக்காடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பணப்புழக்கம் இல்லாதது காரணமாக இந்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. வங்கி களில் இந்நிறுவனங்களில் 40 விழுக்காடு நிறுவனங்களுக்கு கடன் மறுக்கப்பட்டிருக் கிறது. இதன் காரணமாக தொழிலை தொடர்ந்து நடந்த முடியாத நெருக்கடிக்கு அந்த நிறுவனங்கள் உள்ளாகின என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment