நீரிழிவு சிகிச்சை பராமரிப்பின் மறுவடி வமைப்பு மீது 2000 நோயாளிகளிடம் நடத் தப்பட்ட நேர்காணல் அறிக்கை வெளியீடு
14.11.2022 அன்று நீரிழிவு நாள் கடைப்பிடிப் பதையொட்டி அடுத்த தலைமுறைக் கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை, டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தால் 11.11.2022 அன்று நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் மீதான ஆராய்ச்சியில் பிரபல நிபுணர்கள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது.
கலந்துரையாடலுக்கான நிபுணர்கள் குழுவில் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் தலைவரும், தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர். வி. மோகன் மற்றும் இதன் நிர்வாக இயக்குநரும் மற்றும் சிறப்பு நிபுணருமான டாக்டர். ஆர். எம். அஞ்சனா மற்றும் இதன் துணைத்தலைவர் டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் ஆகி யோர் இடம்பெற்றிருந்தனர்.
மன அழுத்தம் குறைப்பு
“உங்களது நீரிழிவு சிகிச்சைப் பராமரிப் பிற்கு அவசியமானது என்று நீங்கள் கருது கின்ற அதிக முக்கியமான 5 விஷயங்கள் என்ன?” என்பது மீது இந்தியாவெங்கிலும் 1800 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்ற ஒரு விரிவான, ஆழமான சர்வே மேற்கொள்ளப் பட்டது. நீரிழிவு பராமரிப்பில் மிக முக்கிய மான, முதன்மையான அம்சமாக இருப்பது உணவுக் கட்டுப்பாடு என்று ≃50% நபர்கள் கருதுவதை இந்த சர்வே வெளிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து உடற்பயிற்சி, குறித்த காலஅளவுகளில் மருத்துவப் பரிசோதனை கள், நல்ல உடல்நல பராமரிப்பு குழுவினர் மற்றும் மனஅழுத்தம் குறைப்பு ஆகிய அம் சங்களை முக்கியமானவைகளாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். நோயாளிகளது கருத்து களுக்கு செவிமடுப்பதும் மற்றும் அவற்றை அக்கறையோடு பரிசீலிப்பதும், நோயாளி களின் தேவைகளுக்கேற்ப சிகிச்சை திட் டத்தை பிரத்யேகமாக வழங்குவதற்கு மருத்து வர்களுக்கு உதவுகிறது.
தவறாது சிகிச்சை பெறவேண்டும்
டாக்டர். வி. மோகன் இந்நிகழ்வின்போது கூறியதாவது: “நீரிழிவுக்கான சிகிச்சை மற்றும் அதன் மேலாண்மையில் குறித்த காலஅளவு களில் தவறாது சிகிச்சை பெறும் விஷயத்தைப் பொறுத்தவரை நோயாளிகள் என்ன விரும்பு கின்றனர் மற்றும் அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து இந்த சர்வேயின் மூலம் ஊக்கமளிக்கும் முடிவு களையும், சிறப்பான கற்றல்களையும் நாங்கள் உண்மையிலேயே கண்டறிந்திருக்கிறோம்.”
சிகிச்சை நெறிமுறைகள் மாறுபடுகின்றன
டாக்டர். ஆர்.எம். அஞ்சனா இந்நிகழ்வின் போது பேசுகையில், “எமது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையைப் பரிந்துரைப்பதற்கு முன்பு, அவர்களது நோய் பாதிப்பு தொடர் பான பல்வேறு வகை சிக்கல்கள், முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் அளவுருக்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருப் பதால் சிகிச்சை நெறிமுறைகளும் மாறுபடு கின்றன. பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் வாழ்க்கைமுறை திருத் தங்கள், உணவுமுறை செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கையை மாற்றுகின்ற பிற முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை வழிகாட் டலும், ஆதரவும் மற்றும் ஆலோசனையும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. குறிப்பாக அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத் தோடு தொடர்புடையதாக இம்முடிவுகள் இருக்கிறபோது இந்த வழிகாட்டலும், ஆதர வும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று கூறினார்.
சிறப்பு செயல்திட்டங்கள்
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் துணைத்தலைவர் டாக் டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் பேசுகையில், “நீரிழிவு நாள் கடைப்பிடிப்பதையொட்டி பொதுமக்களுக்கு நீரிழிவு குறித்த விழிப்பு ணர்வை வழங்கவும் மற்றும் அவர்களை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்கவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு சிறப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவரின் உரைகள், கலந்துரையாடல் அடிப்படையில் நோயாளிகளுக்கு கல்வி, ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் செய்முறை விளக்கம், வில்லுப்பாட்டு, யோகா பயிலரங்குகள், சைக்கிள் ரேலி நிகழ்வுகள், வாக்கத்தான்கள், வினா விடை நிகழ்ச்சிகள் மற்றும் மெகா மருத்துவ முகாம்கள் ஆகி யவை இவற்றுள் இடம்பெற்றிருந்தன,” என்று கூறினார்.
- தகவல்: வி.எஸ்.
No comments:
Post a Comment