உயர்ஜாதி ஏழை என்ற பெயரால் 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவர்கள் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

உயர்ஜாதி ஏழை என்ற பெயரால் 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவர்கள் கண்டனம்!

சென்னை, நவ.8 பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று நேற்று (7.11.2022) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப் பினைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

அக்கருத்துகளின் விவரம் வருமாறு:

10 விழுக்காடு இடஒதுக்கீடு தீர்ப்பு: ஒன்றிணைந்து போராடவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப் புச் சட்டத் திருத்தத்தை 2019 ஆம் ஆண்டு நாடாளுமன் றத்தில் ஒன்றிய அரசு நிறை வேற்றியது. இதற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி தி.மு.க உள்ளிட்ட அரசி யல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன. அரசியல் சாசன அமர்வு முன்பு தமிழ்நாடு, கேரளா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது வாதங்களை முன்வைத்தன. பொரு ளாதார இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், இட ஒதுக் கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல, பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதே இடஒதுக்கீட்டின் நோக்கம் என்றும் தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோ ரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று (7.11.2022) தீர்ப்பளித்தது.

அதில், இந்த சட்டத்துக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 3 பேர் ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன் னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப் பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட் டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:-

"பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப் பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரான தான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூகநீதியைக் காக்க முதல் அரசமைப்புச் சட்டத் திருத் தத்தை மேற்கொள்ள வைத்த தமிழ்நாட்டு மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத் தக்கது அல்ல!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

மதிமுக பொதுச்செயலா ளரும், மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, பொருளாதாரத்தில் பின்தங் கிய முன்னேறிய சமூகத்தின ருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டம் இயற் றியது.

சமூகநீதிக் கோட்பாட்டையே தகர்க்கும் வகையில் ஒன் றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே உச்சநீதிமன்றம் மொத்த இடஒதுக்கீடு 50 விழுக் காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. அரசு அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிராக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது சமூக நீதியையே நீர்த்துப் போகச் செய்கிற நடவடிக்கையாகும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக் கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.

இந்த முக்கியமான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் உயர் ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜெ.பி.பார்திவாலா ஆகி யோர் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மண்டல் குழு வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக் கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதை முறியடிப் பதற்குத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தில் 103 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது..

ஒட்டுமொத்தமாக சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள் ளாக்கும் வகையில், பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய 103 ஆவது சட்டத் திருத்தம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை (Basic Structure)  தகர்த்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத் தக்கது அல்ல. சமூகநீதிப் போராட்டத்தில் நீண்ட நெடிய களங்களை சந்திக்க வேண்டிய நிலைமையை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் 

இது அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரான தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் பேரமர்வு விசாரணைக்குச் சீராய்வு மனு தாக்கல் செய்யப் படும். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள் என நம்புகிறோம். இடஒதுக்கீட்டுப் பிரச்சினை அரசியல் களத்தில் தீர்க்கப்பட வேண்டியது. 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங் கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத் தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்ஜாதியின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103 ஆவது அரச மைப்புத் திருத்த சட்டம் செல் லும் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வு  தீர்ப்பளித்து உள்ளது.

இதில் இரண்டு நீதிபதிகள் 103 ஆவது அரசியல் திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்ட மைப்புக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளனர். இது சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது.

இது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கு நீதி வழங்க வழிவகை செய்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப் படையை மட்டும் அளவுகோலாக கொண்டதும், அது உயர் ஜாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொரு ளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக் காரணம். எனவே, நீதிபதிகளின் இக்கருத்து ஏற்பு டையதல்ல. இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இவை பழங் குடி, தாழ்த்தப்பட்ட சமூக, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடே 

2006-க்குப் பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது.

அதுவும் கிரிமிலேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையான பயனை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிடவில்லை. அதைப்போலவே, மருத்துவக் கல்லூரி களில் இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சென்ற ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுவும் சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்துத்தக்கது.

எனவே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்து கொள்கிறது.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் 

இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மிகக்கூடாது என்று 1962 ஆம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992 ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக் கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறது. ஆனால், 10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிப்ப தற்காக, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்று நீதிபதி கள் கூறியுள்ளனர். இது சமூக அநீதியானது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் 

டி.டி.வி. தினகரன்

உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புஅதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. எனவே, தமிழ்நாடுஅரசு இதில் உறுதியாக நின்று, 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment