10 சதவிகித இட ஒதுக்கீட்டால் பயன் பெறும் உயர் ஜாதியினர் யார்? யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

10 சதவிகித இட ஒதுக்கீட்டால் பயன் பெறும் உயர் ஜாதியினர் யார்? யார்?

சென்னை,நவ.11- பொருளாதா ரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டால் தமிழ்நாட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர் உள்பட 79 பிரிவினர் பயனடைவார்கள். தமிழ்நாட் டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், ‘ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு, கல்விக்காக’ என்று குறிப்பிட்டு இதற்கான சான்றுகள் வழங்கப் படுகின்றன.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்குவ தற்கான சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கடந்த 2019 மே மாதம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் தமிழ்நாட்டிலும் அந்த சட்டம் அமல்படுத்தப்பட் டது. இந்த சட்டத்தின் கீழ், தகுதி யானவர்களுக்கு ஒன்றிய அரசு விதிகளின்படி சான்று வழங் குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் களை வருவாய் நிர்வாக ஆணை யர் வழங்கினார்.

அதேநேரம், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், மாநில அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு இதுவரை வழங்கப் படவில்லை. மேலும், ஓபிசி பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நீங்கலாக, பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த சட்டத்தின்படி சான்று வழங்கப் படுகிறது. 

குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 5 ஏக்கர் அல்லது அதற்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றி இந்த சான்று வழங்கப்படுகிறது.

இடையில் சான்று வழங்கு வதில் சிக்கல்கள் எழுந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ‘ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு, கல்விக்காக’ என்று குறிப்பிடப்பட்டு சான்று வழங் கப்படுகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக மாண வர்கள் இந்த சான்றை பெறு கின்றனர்.

இந்நிலையில், 18 ஆயிரத்துக் கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக வும், அதில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை தரப்பில் கூறப்படுகிறது.

யாருக்கு ஒதுக்கீடு?

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, கடந்த 1985ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 79 பிரிவினர் பொதுப் பிரிவினராக அடை யாளம் காணப்பட்டுள்ளனர். தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை உள்ளிட்ட 10 வகை முஸ்லிம் வகுப்பினர், ஆங்கிலோ இந்தியன், ஜனோலா சால்வே ஷன் சர்ச், லண்டன் மிஷன் கிறிஸ்தவர், மலங்கரா சிரியன் கிறிஸ்தவர், ரோமன் கத்தோலிக்க மலங்கரா, பொதுப் பிரிவில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிசைவரில் பல பிரிவுகள், ஆற் காட்டு வெள்ளாளர், கார்காத் தார், சைவ வெள்ளாளர் உள்பட வெள்ளாளரில் பலபிரிவுகள், ஆரிய வைசிய செட்டியார் உள்பட செட்டியாரில் பல பிரிவுகள், பிராமணர், எழுத்தச்சர், ஜைனர், கம்மவார் நாயுடு, மேனன், நம்பியார் உள்ளிட்ட நாயர் சமூகத்தினர், பிராமணர் தவிர்த்த காஷ்மீரி, பஞ்சாபி, குஜ ராத்தி, ஒரியா, அசாமி, மராத்தி, பணிக்கர், சைவசிவாச்சாரி யார்கள், வாரியர் உள்ளிட்ட 79 பிரிவினர் இடம்பெற்றுள்ளனர். 10 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இவர்கள் பயன் பெறு வார்கள்.


No comments:

Post a Comment