கருநாடகத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் : சித்தராமையா வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

கருநாடகத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் : சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு, அக்.9 கருநாடகத்தில் இட ஒதுகக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சித்த ராமையா கூறியுள்ளார். பெங்களூருவில்  நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட் டத்தில் கலந்துகொண்ட பிறகு எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

முதல மைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக் கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந் துரைகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினோம். சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டி இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். நீதிபதி நாகமோகன்தாஸ் குழு அறிக்கை வழங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை இந்த அரசு அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பழங்குடியினர் சமூகத்தில் மொத்தம் 6 ஜாதிகள் உள்ளன. தற்போது அதன் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. ஆதி திரா விடர்களுக்கு 17 சதவீதமாகவும், பழங் குடியினருக்கு 7 சதவீதமாகவும் அதி கரிக்க வேண்டும் என்று நாகமோகன் தாஸ் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒன்றிய அரசு, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அந்த திருத்தத்தை 9-ஆவது அட்ட வணையில் சேர்த்தால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது. இந்த பணியை முதலில் ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இந்த கருத்தை நாகமோகன்தாஸ் குழு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது. இதற்கு அரசியல் சாசனத்தில் பாது காப்பு வழங்கப்பட்டுள்ளது. அசாதா ரண சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முன்னேறிய சமூகங்களில் பொருளா தார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒன்றிய அரசு 10 சதவீத இட ஒதுக் கீட்டை வழங்கியுள்ளது. இதனால் ஒன்றிய அரசில் இட ஒதுக்கீடு 49லு சதவீதத்தில் இருந்து 59லு  சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு சித்த ராமையா கூறினார்.


No comments:

Post a Comment