திருவாரூர், அக். 22- திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 19.10.2022 புதன் காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன் தலைமையில் நடைபெற்றது
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செய லாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராம பிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித் தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா , தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழாவினை பொதுவெளி யில் நடத்தி மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது எனவும்,
மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைபூண்டி உள் ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தி னர், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 -ஆவது பிறந்தநாள் (டிசம்பர் - 2)பரிசாக வழங்குவது, ஆசிரி யர் பிறந்தநாள் பெருவிழா மாவட்டம் முழுவதும் சுவர் எழுத்து விளம்பரங் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது.
திருவாரூரில் பொதுக் கூட்டம் பொது நிகழ்வுகள் நடத்திட வசதியாக திறந்த வெளி அரங்கம் அமைத்திட நகராட்சி நிர்வாகத்தை திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது
மாநில விவசாய அணி செயலாளர் க.வீரையன், மாநில பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மாவட்ட, துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் எஸ்.வி. சுரேஷ், காப்பாளர் முனியாண்டி, நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் ரெத்தினசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன், ஒன்றிய தலைவர்கள் தங்க.கலியபெருமாள், குடவாசல் ஜெயராமன், இராஜேத்திரன் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, சிவ ராமன் சோழங்கநல்லூர் கவுதமன், இளை ஞரணி தோழர்கள் செல்வேந்திரன், குபேந்திரன், தஞ்சை நகர செயலாளர் அ.டேவிட் உள்ளிட்ட கழகத் தோழர் கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment