ஏன் வேண்டும் பகுத்தறிவு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

ஏன் வேண்டும் பகுத்தறிவு?

என் துறையில் ஆழ்த்த அறிவுள்ளவ னாக இருக்கிறேன்.. பல்துறை சார்ந்த அனைத்தையும் அறிந்து கொள்ளும் பொது அறிவு போதுமே! புதிதாக பகுத்தறிவு ஒன்று வேண்டுமா? என்கின்றனர் சிலர்.

ஆம். பொது அறிவு வேண்டும், ஆனால் அதுமட்டும் போதுமானதாக இருக்காது. நம் தேவைகளை முழுமை யாக பெறுவதற்கும், நேரம் விரயம், பொருளாதாரம் விரயம் ஆகாமல் துரிதமாக செயல்படுவதற்கு பகுத்தறிவு தேவை. அப்படி செயல்படும்போது, நம் செயலின் விளைவை அறிவது பகுத்தறிவு!

அவ்விளைவை அறிந்து , எதிர் கொள்ளக்கூடிய துன்பத்தை தடுத்து கொள்ளக்கூடிய வகையை அறிவது பகுத்தறிவு!!

அவ்வகையை அறிந்து, எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்து, அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடப்பத்தும் பகுத்தறிவு!!

மனதை அலைய விடாமல் தீமையை அண்டவிடாமல் விலக்கியும், பகைவர் களிடம் இருந்தும் நம்மையும் நம்மை சுற்றிவுள்ள அனைவரையும் காக்கும் அரண் தான் பகுத்தறிவு!!!

வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, எப்பொருள் எத்தகைவாயினும், யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது பகுத்தறிவு அறிவு. சுருங்கச் சொன்னால் பகுத்தறிவு யாதெனில், பொது அறிவுவுடன் கூடிய சுயசிந்தனை மற்றும் அறிவியல் நோக்கு பார்வையும் அதன் அறிவும் பகுத்தறிவு!!

மேலும் சிலர், மனிதன் என்றாலே பகுத்தறிவு உடையவன்தானே அதில் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வதன் தனித்துவம் என்ன என்று கேட்கிறார்கள்.

ஆம். பகுத்தறிவை பயன்படுத்தாமல் மனிதராக இருக்க முடியாது தான். ஒரு புடவைக் கடைக்குச் சென்று புடவையை வாங்கும்முன் இந்தத் துணி சாயம் போகுமா? இதன் விலை சரியானதுதானா? இந்தக் கடையில் நாம் முன்பு வாங்கிய துணிகள் எவ்வாறு இருந்தன என்று சிந்திக்கும் மனிதர்கள், அந்தத் துணிகளை யாகசாலையில் போட்டு எரிக்கும் போது அவர்களின் பகுத்தறிவு விடை பெற்று விடுகிறது. பக்தியின் பேரால், கடவுளின் பேரால் தடுக்கப்படுகிறது.

திருமணங்களுக்கு துணி எடுக்க விலையை, தரத்தை, தள்ளுபடியை தீர பகுப்பாய்வு செய்து பொருளாதார வீணடிப்பை தடுக்கும் அறிவு, ஒரு குறிப்பிட்ட நாளை, சுபமுகூர்த்த்த நாள் என்ற நம்பிக்கையால் திருமண மண் டபம் கிடைக்காமல், வேறு நாளில்  கிடைக்கும், வீட்டிற்கு அருகில் உள்ள விலை குறைந்த மண்டபத்தை விடுத்து பல கிலோமீட்டர் தூரத்தில் பெரும் செலவில் கிடைக்கும் மண்பத்தை தேர்வு செய்து நடத்தும் போது விடைபெறுகிறது.

இவ்வாறு இல்லாமல் கடவுள், மதம், மதச் சடங்குகள், குடும்பப் பழக்கங்கள், என்று எதுவானாலும் அவற்றை புறம் தள்ளி, அறிவியல் அணுகுமுறையுடன், பகுத்தறிவுடன் செயல்பட்டு தள்ள வேண் டியவற்றை தள்ளிவைத்து எப்போதும் தடையில்லாமல் பகுத்தறிவுடன் செயல்படுபவர்கள் பகுத்தறிவாளர்கள்.

- க.கார்த்திகேயன், ஆவடி.


No comments:

Post a Comment