மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!

சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சினை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டு மானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப் போலத்தான் இதய நாள அடைப்பு நோயும். தீ விபத்து ஏற்படுகிறதென்றால் அது ஒரு தவிர்க்க முடிந்த ஒரு காரணத்தினால்தான் ஏற்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

தீ சிறிதளவு பிடித்து பற்றிப் படர்வதற்குள் அதை அணைப்பதற்குரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் பெரும் சேதத்தைத் தவிர்க்க முடியும் என்பதைப் போலத்தான் மாரடைப்பு நோயும்.

இதயத் தசைகளின் சேதத்தை எப்படி உணர்ந்து கொள்ள முடியும்? பாதிக்கப்பட்ட பரப்பளவு தசை, பருமன் இதய நாளங்களின் வெவ்வேறு பிரிவுகளில் எந்த நாளத்தில் அடைப்பு, எந்த அளவுக்கு உள் ளது. என்பதைப் பொறுத்தே அதை உணர முடியும். மிகப்பெரிய பிரிவில் முழுமையான அடைப்பு ஏற்படும்போது ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அடைப்பு ஏற்படுகிறது என்றால், அந்த அடைப்பு முழுவதும் ஒரே நாளில் உரு வானது என்று அர்த்தமில்லை. பல வருடங்களாக இது சிறுகச் சிறுக வளர்ந்து நாளத்தின் உட்பரப்பைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வந்து முழு வதுமான அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகத் தோன்றும் அடைப்பினால் அடைப்பு இல்லாத நாளப் பிரிவுகளிலிருந்து அடைப்பு ஏற்பட்டிருக்கிற நாளத்திற்கு ரத்தம் பின்னோக்கிப் போகும்படி செய்து அடைப்பினால் பாதிக்கப்பட்ட பகுதி முழுமையாக சேதம் அடையாமல் செய்து விடுகிறது. இது போன்ற அடைப்பு நாளங்கள் அவ்வப்போது நோயாளிகளிடம் இருப்பதைக் காண்கிறோம்.

இப்படியில்லாமல் அடைப்பு 75 அல்லது 85 சதவிகித நாளத்தின் உள்பரப்பைப் பாதிக்கும் போது அந்த நபருக்கு நடந்தாலோ அல்லது விரை வாகச் சென்றாலோ மார்புப் பகுதியில் வலி வரலாம். பாரமாக உணரலாம். ஒருவித எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். குறைந்த தூரம் நடந்தாலே ஒரு மைல் தூரம் நடந்த மாதிரியான களைப்பு உருவாகலாம். அதிலும் நன்றாக உணவருந்திவிட்டு நடக்கும்போது இவர்களால் சிறிதளவு தூரம் மட்டுமே நடக்க முடியும். இதெல்லாமே எச்சரிக் கையான அறிகுறிகள்.

இந்தவிதமான கோளாறு உள்ளவர்கள் ஆலோ சனை கேட்கும்போது அதிகப்படியான இதய நாள அடைப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். அவர்கள் நடக்கும்போதும், விரைவாகச் செல்லும் போதும், இதயத்தின் செயல்பாடு அதிகரித்து இதயத்திற்கு அதிகமான பிராண வாயு தேவைப் படுகிறது. அதே சமயம் இதயத்தில் அடைப்பு இருப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் நெஞ்சு வலி உருவாக வாய்ப்பிருப்பதை மென்மையாக எடுத்துச் சொல்கிறோம். ஆஞ்சியோ கிராம்’ ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். அதன் மூலம் இதயத்திலுள்ள அடைப்பின் அளவு எந்த அளவுக்கு உள்ளது? எத்தனை இதய நாளப் பிரிவு களில் உள்ளது? என்பதை அறிந்து கொள்ளலாம்.

அப்படி அடைப்பு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டால் பலூன் விரிவாக்க முறையைப் பயன் படுத்தியோ அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் பைபாஸ் மூலம் குறுக்குப் பாதை அமைப்பதைப் போன்ற அறுவை சிகிச்சை முறையையோ பரிந்துரை செய்கிறோம் இதைச் செய்யாவிட்டால் நாளடைவில் முழுமையான அளவில் நாள அடைப்பு ஏற்பட்டு, பெரும் பகுதி இதயத் தசையும் பாதிக்கப்பட்டு உடலே மெலிந்து போகும்படி. ஆகிவிடும் என்பதையும் எடுத்துச் சொல்கிறோம். பலூன் முறையின் மூலமோ, அறுவை சிகிச்சை மூலமோ பலனடைந்தவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் தங்களது காரியங்களைச் செய்ய முடிகிறது. விரைவாக நடக்க முடிகிறது. இதையே ஆங்கிலத்தில் விமிளிஷிளிலிக்ஷிகி ஞிமிகிலி ஷிகிலிக்ஷிகிநிணி என் றும் சொல்கிறோம். இதயத் தசையைக் காப்பாற்றுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாரடைப்பின் விளைவான மரணத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற இது ஒரு வழி. இது மட்டு மில்லாமல், சர்க்கரை வியாதி உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், நிறையப் புகை பிடிப்பவர்கள் கூடுதலான ரத்த அழுத்தமோ, கொழுப்புச் சத்தோ உள்ளவர்கள் எங்களிடம் வரும்போது தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே சொல் வார்கள். எதிர் வழக்காடுவார்கள். ஒரு மலையைப் பார்த்ததும் அது எரிமலையா என்பதை யூகிக்க முடியாது. நெருங்கி ஆய்வுக்குட்படுத்தினால்தான் அதைக் கண்டு பிடிக்க முடியும். அதைப்போலத் தான் இதுவும். பலருக்கு இதய நாளத்தில் அடைப்பு இருந்தாலும் அவர்களுக்கு நடைமுறையில் அவ் வளவாக அது தெரியாது. வலியும் தோன்றுவ தில்லை. சிலருக்கு அஜீரணக் கோளாறு இருப்பது போன்ற உணர்வு மட்டுமே இருக்கும். சிலருக்கு நடக்கும் போது வலியில்லாமல் அசதி இருக்கலாம்.

இப்படிப்பட்ட உபத்திரவங்கள் உள்ளவர்களை ‘டிரெட்மில்’ என்னும் ஆய்வு முறைக்கு உட்படுத் தினால், இரண்டாவது அல்லது மூன்றாவது படி நிலையில் அவர்கள் நடக்கும் போது இதய வரை படத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவதை உணர முடி யும். இவ்வாறு உள்ளவர்களை ‘ஆஞ்சியோகிராம்’ ஆய்வுக்கு அனுப்புகிறோம்.

இந்த ஆய்வு முறையில் நமக்கே ஆச்சரியம் உண்டாகும் விதத்தில் சிலரது இதய நாளத்தில் அடைப்பு இருப்பதைக் காண்கிறோம். இந்த வகை ரத்த நாள அடைப்பை மேற்சொன்னவாறு பலூன் முறையிலோ, அல்லது அறுவை சிகிச்சை மூலமோ சரிப்படுத்தி பாதிக்கப்பட்ட இதயத் தசைக்கு மறு படியும் ரத்த ஓட்டம் சென்றடையச் செய்கிறோம். இன்னும் சிலருக்கு ரத்த நாள அடைப்பு அதிகமாக இல்லாமல், 50 அல்லது 60 சதவிகிதம் இருக்கலாம். அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் அதற்கான அறிகுறிகள் தெரியாது. ஆனால், கெட்டவாய்ப்பாக இதய நாள அடைப்புப் பகுதியில் சில கோளாறு களினால் ரத்த அடைப்பின் வெளிச்சுவர்ப்பகுதியில் விரிசலோ, புண்ணோ ஏற்பட்டால் தட்டணுக்கள் அதை நோக்கி வேகமாக நகர்ந்து ரத்தக் குழாயின் முழுப் பகுதியையுமே அடைத்து விடுகிறது.

அடைப்பின் சுவரில் விரிசல் ஏற்படும்போது ரத்தத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான ரத்த அணுக் கள் இந்த அடைப்பின் பகுதியை நோக்கி ஈர்க்கப் படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் அடைப்பின் பின்பகுதியிலுள்ள கொழுப்பு, மற்றும் நச்சுப் பொருட்கள் தான்.

இவர்களுக்கு அவ்வப்போது திடீரென்று குறிப்பிட்ட நாள், நேரம், நொடி என்றில்லாமல் எந்தச் சமயத்திலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலி தோன்றும். இதனாலேயே மருந்து சாப்பிடுவது அவசியம் என்று இவர்களிடம் உணர்த்துகிறோம். சில ஆய்வுகளைச் செய்து கொள்ளச் சொல்கிறோம். மாரடைப்பு வந்தவர் களுக்கும் இரண்டு, மூன்று வார கால இடை வெளியில் அறுவை சிகிச்சை செய்கிறோம். அதன் மூலம் வேறு சில ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கிற அடைப்பையும் சரி செய்கிறோம். இதனால் அவர் களுக்கு மறுபடியும் மாரடைப்பு வரும் அபாயத் தைத் தடுக்க முடிகிறது.

No comments:

Post a Comment