இந்திய பெண்ணுக்கு அய்.நா.வில் அங்கீகாரம் மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

இந்திய பெண்ணுக்கு அய்.நா.வில் அங்கீகாரம் மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்

 நியூயார்க், அக்.14- ஆசியாவில் இருந்து அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அஸ்வினி கே.பி. பெற்று உள்ளார். 

இனவெறி, சகிப்புத் தன்மை குறித்த அய்.நா. மனித உரிமை ஆணையத் தின் சிறப்பு அறிக்கையா ளராக இந்தியாவைச் சேர்ந்த அஸ்வினி கே.பி. நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியரும், தாழ்த்தப் பட்டோர் சமூக  செ யல்பாட் டாளருமான அஸ்வினி கே.பி. பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் பிரி வில் உதவிப் பேராசிரிய ராக பணியாற்றியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-ஆவது நபர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். 


No comments:

Post a Comment