திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி

திருவள்ளூர்,அக்.22- திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தை, நேற்று (21.10.2022) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங் கேற்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.143.02 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை கடந்த ஜனவரி 12ஆம் தேதி, டில்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி காணொலிவாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, 2021_-2022ஆம் கல்வி யாண்டுக்கான இளநிலை மருத் துவ படிப்புக்கு நூறு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு, கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2022-_2023ஆம் ஆண்டுக்கு 100 மாண வர்கள் சேர்க்கைக்கான அங்கீ காரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது.

இதற்கிடையே, திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்ட டம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற் றும் விடுதிகள் ஆகியவை அமைக் கும் பணி நடைபெற்று முடிவுக்கு வந்தன. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத் துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று (21.10.2022) நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி சிறீவத்ஷன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜெயக் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், கா.கணபதி, துரை சந்திரசேகர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment