ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வழக்கு: விசாரணைக்கு ஏற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வழக்கு: விசாரணைக்கு ஏற்பு!

புதுடில்லி, அக்.19 மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுக் கும்போது, ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பது அவசியம் தேவை; காரணம், நாட்டில் ஜாதிகள் அப்படியே இருக் கின்றன என்பதோடு, சமூக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்- OBC, MBC உள்பட பல பிரிவுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்து செயல்படுத்தும்போது ஏற்படும் வழக்குகளில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்கள் புள்ளி விவரக் கணக்கைக் காட்டுங்கள் என்று தவறாமல் கேட்கின்றன!

அதனை நியாயப்படுத்திட, மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு மிக முக்கிய மான தேவையாகும் என்பதால், ஒன்றிய அரசு ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்திடுவது அவசியம் என்று நாடு முழுவதும் சமூகநீதிப் போராளிகள் வேண்டுகோள் விடுத்தும், ஒன்றிய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. அதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ளன.

அதில் முக்கிய பங்கு வகிப்பது தோழர் கோ.கருணாநிதி அவர்கள் பொதுச்செயலாளராக இருக்கும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆகும்!

17.10.2022 அன்று அவ்வழக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றத்தில் வந்தபோது, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில்,  உச்சநீதிமன்ற பிரபல மூத்த வழக்குரைஞர்கள் M.N.ராவ் மற்றும் A.D.N.ராவ் ஆகியோர் ஆஜராயினர்.

இந்த அமைப்புக்காக வாதாடும் பிரபல சட்ட நிபுணர் M.N.. ராவ் அவர்கள் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; தற்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக இருந்தவர். மற்றொரு மூத்த வழக்குரைஞர் கி.ஞி.ழி. ராவ் அவர்கள், பிரபல சமூகநீதிப் போராளியான காலஞ்சென்ற திரு.சுப்பாராவ் அவர்களின் மூத்த மகன் ஆவார்.

அவரும், இவ்வழக்கில் வாதாடுகின்றார். வழக்கு விசாரணை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது! 

No comments:

Post a Comment