உலக அளவில் ஏழ்மை நிலையில் இந்தியா முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

உலக அளவில் ஏழ்மை நிலையில் இந்தியா முதலிடம்

ஆய்வுத் தகவல்

புதுடில்லி, அக்.22- உலக நாடுகளின் ஏழ்மை நிலை  குறித்து, அய்க்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி, அதனடிப் படையில், புதிய பல பரிமாண வறுமைக் குறி யீட்டை (Multidimensional Poverty Index) இரண்டு நாள்களுக்கு முன்பு வெளி யிட்டு உள்ளது. 

அதில், ஏழ்மை நிலையில், உலக  அளவில் இந்தியாவே முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 22 கோடி பேர் ஏழ்மை நிலையில் இருப்பதாக வும், இந்தியாவுக்கு அடுத்தபடியாக நைஜீரியா 9.6 கோடி ஏழைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அய்.நா.  அறிக்கை கூறியுள்ளது. 2005 முதல் 2019 வரை இந்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 41.5 கோடி பேர் ஏழ்மை  நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றாலும், தற்போதும் உலகிலேயே ஏழைகளை அதிகம் கொண்ட நாடாக இந்தியாவே உள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 111 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த பல்வேறு தரவுகளை  வைத்து, இந்த ஏழ்மை பட்டியலை அய்க்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 120 கோடி பேர்-  அதாவது உலக மக்கள் தொகை யில் சுமார் 19.1 சதவிகிதம் பேர், கடுமையான வறு மையில் வாழ்கின்றனர். சப்- சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் அதிக பட்சமாக 57 கோடி பேரும்,  தெற்காசியாவில் 38 கோடி பேரும்  ஏழ்மை  நிலையில் உள்ளனர். 

இவ்வாறு வறுமையின் பிடியில் சிக்கியிருப்ப வர்களில் சரி பாதிப்பேர் அதாவது 60 கோடி பேர் 18 வயதுக்குக் கீழான குழந்தைகளாக உள்ளனர். இதிலும், இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண் டால், 2019-21 ஆம்  ஆண்டில்  9.7 கோடி குழந் தைகள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அதாவது இந்தியாவில் அய்ந்தில் ஒரு குழந்தை (21.8  சத விகிதம்) ஏழ்மையில் உள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம் என்று கூறப்பட் டுள்ளது. மேலும், இந்தியாவின் ஏழைகளில் 90 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களிலும், 10 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர் என்றும் அய்க்கிய நாடுகள், ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களே வறுமையில் முதலிடம்!

அய்க்கிய நாடுகள் அவை வெளி யிட்டுள்ள பல பரிமாண வறுமைக் குறியீட்டில், உலகளவில் இந்தியா  முதலிடத்தில் இருக்கும் அதேநேரத்தில், இந்தியாவிலும் பாஜக ஆளும்  மாநிலங்களே அதிகமான ஏழ்மை  நிலையைக் கொண்ட மாநிலங்களாக இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலமாக- நீண்ட காலமாக  பாஜக கூட்டணி ஆட்சி நடத்திவந்த பீகார் உள்ளது. ஜார்க்கண்ட், மேகாலயா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங் களில் வந்துள்ளன. இவற்றுக்கு அடுத்ததாக ஒடிசா, சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


No comments:

Post a Comment