எஸ்.ஆர்.எம்.யூ. என்ற தென் பகுதி இரயில்வே யூனியனின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான ஸ்டேஷன் மாஸ்டர் தர்மராஜன் அவர்களது காலஞ் சென்ற மகன் திரு. இராஜேந்திரன் அவர்களது மகன் பல்மருத்துவர் இரா. அன்புவின் வாழ்விணையர் திருமதி விஜய வெண்ணிலா அவர்கள் தனது 40ஆவது வயதில் உடல் நலக் குறைவினால் நேற்று (17.10.2022) மறை வுற்றார். அவரது இறுதி நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு (18.10.2022) தஞ்சையில் நடைபெற்றது.
செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திரு.த. வீரசேகரன் அவர்களிடமும், மறைந்த திருமதி வெண்ணிலா அவர்களது வாழ் விணையர் இரா. அன்பு அவர்களிடமும் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment