இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள்

 தனியார் அமைப்பு ஒன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வைத்திருக்கும் கொலு பொம்மை வரிசையில் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களான  தந்தை பெரியார், மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும் வைக்கப்பட் டிருந்தன. 

 இதனை இந்தியாவின் மிக முக்கியமான செய்தி பகிர்வு நிறுவனமான ஏ.என்.அய்.  "தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி மீதான பேரன்பைப் பாரீர், கொலு பொம்மையில் பிரதமர் நரேந்திரமோடி! என்று எழுதி படத்தோடு பதிவிட் டிருந்தது. இதனைப் படத்தோடு மோடியின் சமூக வலைதளக் கணக்கிற்கும் அனுப்பியது, அதை மோடியைப் பின்பற்றுபவர்கள் அனைவருமே தமிழ்நாட்டு மக்களின் மோடி மீதான பக்தி என்ற தலைப்பில் பரப்பினர்,  இந்த நிலையில் இந்த சமூகவலைதளத்தைப் பார்த்த கொலு வைத்திருந்த அமைப்பினர் அது மோடி அல்ல, தந்தை பெரியார் என்றும் கொலு பொம்மையில் உயிரோடு இருப்பவர்களின் சிலைகளை வைப்பது இல்லை என்றும் விளக்கம் கொடுத்தனர்.  இதனை அடுத்து ஏ.என்.அய். வருத்தம் தெரிவித்து, தனது வலைதளத்தில் தந்தை பெரியார் இருந்த கொலுசிலை வரிசைப் படத்தை நீக்கியது.

குழந்தை திருமணம் செய்த வழக்கு

சிதம்பரத்தில் தீட்சிதர் உள்பட இருவர் கைது 

சிதம்பரம்,அக்.5- கடந்த 2021இல் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக புகாரில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் குறித்து கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் அடிப் படையில் வழக்கு போடப்பட்டது. குழந்தை திருமணம் செய்ததாக சிறுமியின் தாயார் உட்பட ஆறு பேர் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

No comments:

Post a Comment