சிறுபான்மை மத மக்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

சிறுபான்மை மத மக்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதா?

[24-10-2022 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தின்; தமிழாக்கம்]

முறையான புகார் ஒன்று வருவதற்குக் காத்திராமல். சிறுபான்மை மத மக்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் வகையிலானப் பேச்சு பேசுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு  உச்சநீதிமன்றம்; ஆணையிட்டதற்கு தக்க நியாயமான காரணங்கள் உள்ளன. அத்தகைய புகார் மீது உடனடி நடவடிக்கு மேற்கொள்வதற்கு தயங்கும் காவல்துறை அதிகாரிகள்  மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ளப்படும் என்று அது எச்சரித்து உள்ளது. தன் முன் உள்ள ரிட் மனு ஒன்றில் முடிவின்றி வெறுப்பு பேச்சினைத் தொடர்ந்து பேசிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, டில்லி, உத்தரப்பிரதேசம், உத்தர காண்ட் மாநில காவல்துறையினருக்கு இந்த ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இத்;தகைய வெறுப்புப் பேச்சுகள் பெருகி வருவதையும், இதனைத் தடுக்கத் தேவையான விதிகள் இது தொடர்பான  சட்டத்தில் இருந்த போதிலும், அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படாததை நீதிமன்றம் சுட்டிக் காட்டி உள்ளது.

இந்திய ஒன்றிய அரசும், அதனைப் போன்ற மனநிலை கொண்டுள்ள மாநிலங்களும் நீதிமன்றத்தின் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், மற்றும் சமூக அமைதி ஆகியவை பற்றிய கொள்கைகளை பகிர்ந்து கொள்ளவில்லை  என்பது மிகமிக நன்றாகவே தெரிகிறது. உண்மையைக் கூறுவதானால்,  வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலமாகவோ, பெரும்பான்மை மத சக்திகள் கூட்டும் கூட்டங்களில் அத்தகைய வெறுப்பு பேச்சுகளைப் பேசுவதற்கு அனுமதித்து ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமாகவோ, அவற்றில் சில மாநிலங்கள் நாட்டின் அமைதி கெட்டுப் போவதில் பங்களிக்கின்றன. ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளைக் கூறிவிட்டு, குறிப்பாக அவற்றில் சில இனப் படுகொலையைத் தூண்டுவதாக இருந்த போதிலும், எந்தவித நடவடிக்கைக்கும் உள்படாமல், சில முரண்பாடு கொண்ட மதத் தலைவர்கள் எளிதாகத் தப்பிச் செல்லும் காரணத்தால், மிக உயர்;ந்த உச்சநீதி மன்றத்தின் குறுக்கீடு மிகவும் தேவையானதாக இருக்கிறது.  இத்தகைய ஒரு பின்னணியில்தான், அனைத்து மத, சமூகக் குழுக்களுக்கும் இடையே மதச்சார்பின்மை மற்றும் சகோரத்துவம் போன்ற அரசமைப்பு சட்டப்படியான மதிப்பீடுகளின் தேவை பற்றி உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டி உள்ளது.

ஹரித்துவாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத மாநாடுதான்,  தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கின் வெறுப்புப் பேச்சுக்கான தொனிக்கு முன்மாதிரியாக அமைந்தது. அப்போதும் கூட அது பற்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.  அதன் விளைவாக உத்தரகாண்ட மாநிலம் ரூர்கியில் நடைபெற இருந்த ஒரு மாநாடு உள்ளுர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் நீதிமன்ற குறுக்கீட்டின் காரணத்தால் ஒரு சில கூட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய அத்துமீறல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறமுடியாது. பல்வேறு மத மக்களிடையே மோதல்கள், சண்டை, சச்சரவுகளை; ஏற்படுத்தும்படி தூண்டிவிடும் வகையில் ஹிந்து மத ஊர்வலங்களை நடத்தி, ஹிந்து பண்டிகை களைக் கொண்டாடுவது என்பது ஒரு வாடிக் கையாகவே ஆகிப் போனது.

இதன் விளைவாக எந்த ஒரு சட்டத்தின் விதிகளையும் பின்பற்றாமல்,  இந்த வன்முறை நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறுபான்மை மத மக்களது வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளும் நிகழ்ச்சிகளும் நடந்தேறின. இத்தகைய நிகழ்ச்சிகள் சிறுபான்மை மத மக்கள் மீது மேலும் மேலும் புதிய கட்டுப்பாடுகளையும், தடைகளையும் காவல்துறை விதிப்பதற்கு வழி வகுத்தன. குழு வழிபாடுகள் நடத்துவது குறித்து தேவையில்லாத விசா ரணையை மேற்கொள்வதும், ஹிந்து மத நிகழ்ச்சிகளில் ஊடுருவுவதற்கு சதித் திட்டங்கள் தீட்டினர் என்ற புதிய புதிய குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் வாடிக்கையாகிப் போயின. சில தொலைக் காட்சி நிறுவனங்கள், அவை செயல் படும் நடைமுறையில். பல மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்து வருகின்றன. ஒரு பக்கத்தில் நிர்வாகத்தினர் காட்டும் பாகுபாடு இருக்கும் போது;, மறுபக்கத்தில் சமூக விருப்பு வெறுப்பு களைப் பரப்பி தேசிய அமைதி; குலைக்கப்படுதை அனுமதிக்க இயலாது. அந்த நோக்கத்தில், வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகளை; அதிகாரிகள் மேற்கொள்வதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் நீதிமன்றம் கட்டாயமாக செய்ய வேண்டும்.

நன்றி:  'தி இந்து' 24-10-2022

 தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment