மதம், மொழி அடிப்படையில் மோதலை ஏற்படுத்துவதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் வேலையா? ராகுல் காந்தி எழுப்பும் வினா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

மதம், மொழி அடிப்படையில் மோதலை ஏற்படுத்துவதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் வேலையா? ராகுல் காந்தி எழுப்பும் வினா

அமராவதி, அக். 23- நாட்டில் மதம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே மோதலை ஏற் படுத்தும் முயற்சி அதிகரித்து வருவதாக. ஒன் றிய பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி யுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டுள்ள காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரப்பிரதேசத்தில் தனது நடைப்பயணத்தை மேற் கொண்டார். 

இதையடுத்து, ஆந்திர மக்க ளின் அமோக ஆதரவிற்கும், ஊக் கத்திற்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், 

ஆந்திரப் பிரதேச நடைப்பய ணத்தின்போது பலதரப்பட்ட குழுக்களுடன் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மக்களைப் பாதிக்கும் பல முக்கியமான விஷ யங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்புப் தகுதி வழங்கவும், அமராவதியில் ஒரே தலைநகரை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும் தெரி வித்துள்ளார். 

மேலும், ஜாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களை ஒருவரையொருவர் மோத வைக் கும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

விண்ணை முட்டும் விலை வாசி, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள் ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கிடப்பது மிகுந்த கவ லையளிப்பதாகவும் தெரிவித் துள்ளார். தீவிரமான இந்த பிரச் சினைகளை முன்னிலைப்படுத் தும், காங்கிரஸ் கட்சியுடன் அனை வரும் கைகோர்க்கவேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment