மாத்தூரில் ஆர்.எஸ்.எஸ். எனும் பேராபத்து குறித்து பயிலரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

மாத்தூரில் ஆர்.எஸ்.எஸ். எனும் பேராபத்து குறித்து பயிலரங்கம்

தஞ்சை, அக். 18- தஞ்சை வடக்கு ஒன்றியம், மாத்தூரில் 16.10.2022 அன்று மாலை 6 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். எனும் பேராபத்து பயிலரங்கம் நடைபெற்றது. தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், தஞ்சை மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் ப.விஜ யக்குமார், மாவட்ட தொழிலாள ரணி தலைவர் ச.சந்துரு, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், குடந்தை கழக மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், குடந்தை கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு, காங்கிரஸ் கட்சி இரா.சச்சிதானந் தம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மண்டல தலைவர் மு. அய்யனார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், ஆகியோர் முன்னிலை யேற்று  உரையாற்றினர். திராவிடர் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் கலந்துகொண்டு தொடக்கவுரை யாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் இந்நிகழ்விற்கு தலை மையேற்று உரையாற்றினார். திரா விடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கழக கொள்கை விளக்க வுரை ஆற்றினர்.

கழக பேச்சாளர் பூவை. புலி கேசி கலந்துகொண்டு மனுதர் மத்தை உயர்த்தி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் அபாயத்தை விளக்கி, தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை எனும் நூலை திறனாய்வு செய்து ஆர்.எஸ்.எஸ். எனும் பேராபத்து எனும் தலைப் பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக 5ஆம் வகுப்பு மாணவர் மதுபாலா, 6ஆம் வகுப்பு மாணவர் திவாகர் ஆகியோர் பெரியார் 1000 நூலி லிருந்து 10 கேள்விகளை ஒருவர் கேட்க மற்றொருவர் பதில் கூறினார்.

சமூகநிதி நாள் உறுதிமொழி

சமூக நீதிக்கான சரித்திர நாயகர், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த சமூகநீதி நாள் உறுதி மொழியை 8 ஆம் வகுப்பு மாணவர் சவிதா வாசிக்க மற்ற மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். அந்த மாண வர்களை பாராட்டி மாவட்ட தலை வர் அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜ வேல் நிகழ்வினை ஒருங்கிணைத் தார். இறுதியாக தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் ப.சுதாகர் அனை வருக்கும் நன்றி கூறி உரையாற் றினார்.

அமைப்புசாரா தொழிலாளர் கள் சங்கத்தில் தஞ்சை வடக்கு ஒன்றியம் மாத்தூரை சார்ந்த கட்டு மான தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள், எலக்ட்ரீசியன், போட்டோகிராபர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் 40 பேர் விண்ணப்ப படிவம் மற் றும் கட்டணத் தொகை ஆகிய வற்றை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் அவர் களிடம் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் சந்துரு, செய லாளர் ஏகாம்பரம்,  முன்னிலையில் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி துணை செய லாளர் ரமேஷ், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் சுதாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசு ஆகியோர் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்பரம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மு ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர் ராதா, மாவட்ட தொழிலாளர் அணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் சிந்தனை அரசு, மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் மகேந்திரன், மாவட்ட மாணவர் கழக தலைவர் விடுதலை அரசி, திருவையாறு நகரத் தலைவர் கோ கவுதமன், மாத்தூர் கலைக் கழக தலைவர் நா முனியப்பன், மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் ச.அஞ்சுகம், மகளிர் அணி தோழியர் பாக்கியம், மாணவர் கழக தோழர் நிலவன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment