மோடி அரசின் மேக் இன் இந்தியா சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எருமை மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

மோடி அரசின் மேக் இன் இந்தியா சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எருமை மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்

புதுடில்லி,அக்.9- எருமை மாட் டின்மீது மோதியதால் ’வந்தே பாரத் ரயில்‘சேத மடைந்தது. ரயில் சேதமடைந்த படத்தை வெளியிட்டு மோடியரசின் மேக் இன் இந்தியா குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட டில்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

புதிதாகப் பரிசோதனை செய் யப்பட்ட 3-ஆவது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ. என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப் பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது என்றும் அறி விக்கப்பட்டது.

மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது 6.10.2022 காலை 11.15 மணியளவில் மணிநகர் ரயில் நிலையத்திற்கு சென்றுக் கொண் டிருந்தது. அப்போது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்ட வாளத்தில் குறுக்கிட்டன. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகளும் உயிரிழந்தன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்த காட்சி இணை யத்தில் வைரலானது.

இதையடுத்து இது தான் மோடியின் மேக் இன் இந்தியா திட்டமா என இணைய வாசிகள் பலரும் விமரிசத்து தங்களின் கருத்துக் களைப் பதிவிட்டனர்.

7.10.2022 அன்று மீண்டும்  பசு மாட்டின் மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியது.

மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை மும்பை- காந்திநகர் இடையே அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில், குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதி அருகே நேற்று (7.10.2022) சென்று கொண்டிருந்தபோது பசு மாட்டின்மீது மோதியது. இதில் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியதாகவும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் தெரிவித்தார்.

முன்னதாக, அகமதாபாத் அருகே கடந்த 6.10.2022 அன்று தண்டவாளத்தில் நின்றிருந்த எருமைக்கூட்டம்மீது இந்த ரயில் மோதி இருந்தது. இதில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடர்ந்து இயக் கப்பட்டது. பின்னர், மும்பை வந்த தடைந்ததும் ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி உடனடியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது சம்பவம் 7.10.2022 அன்று நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, எருமைகளை தண்ட வாளத்தில் திரிய விட்டதற்காக, அதன் உரிமையாளர்களான அடையாளம் தெரி யாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 1989-ஆம் ஆண்டின் ரயில்வே சட்டம் 147ஆவது பிரிவின்கீழ் இந்த வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஎஃப் ஆய்வாளர் (வத்வா ரயில் நிலையம்) பிரதீப் சர்மா தெரிவித்தார். இச்சட்டப் பிரிவு, ரயில் வேக்கு சொந்தமான இடங்களில் அங்கீகார மில்லாத நுழைவு தொடர் பானதாகும்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 

‘கால்நடைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தவிர்க்க முடியாதது. விபத் துகளின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வந்தே பாரத் ரயில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி முழு மையாக மாற்றக் கூடியதாகும். அடுத்த கட்டமாக மேம் படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும்’ என்றார். 

No comments:

Post a Comment