ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட அரசு உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட அரசு உதவி

வேலூர்,அக்.4- வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட் டோர், மிகப் பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் இன மக் களின் பொருளாதார மேம் பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு  அமைத்திட மேற்கண்ட இன மக்கள் (ஆண்,பெண் ) 10 நபர் களை கொண்ட உறுப் பினர்கள் குழுவாக அமைத் திட வேண் டும்.  

அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உப கரணங்கள் வாங்குவதற்கு 

ரூ.3 இலட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட் டுள்ளது.   

தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண் ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீ லனை செய்து தேர்வு செய் யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர் மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை அவர் களுக்கு பரிந்துரை செய்யப் படும்.

பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

1. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.

2. குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னு ரிமை வழங்கப்படும்.

3. 10 நபர்களை கொண்டு  ஒரு குழுவாக இருத்தல் வேண் டும்.

4. குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த வர்களாக இருத்தல் வேண்டும்.

5.குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வரு மானம் ரூ.1,00,000,-க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும்.

6. விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள்                                        

    அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத் தில் செயல்படும்  மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை தொடர்பு கொள்ளு மாறு மாவட்ட ஆட்சித் தலை வர் பெ.குமார வேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment