திருடுபோன கடவுள்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

திருடுபோன கடவுள்கள்!

சென்னை அக்14 தமிழ்நாடு கோவில் களில் திருடுபோன நிறைய சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப் பதை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்து வரு கிறார்கள். அவற்றை மீட்பதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் திருடுபோன 9 சிலைகளில் 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கண்டுபிடித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திரு வாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள விசுவநாத சுவாமி கோவில் பழைமையான பெரிய கோவில் ஆகும். இதன் அருகே வேணுகோபால சுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் இருந்த விஷ்ணு, பூதேவி, சிறிதேவி ஆகிய 3 சிலைகள் பாதுகாப்பு கருதி, விஸ்வநாத சுவாமி கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 சிலைகளும் திருடு போய்விட்டன. உண்மை யான சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதில் 3 போலியான சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. 

 இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசா ரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்ட றியப்பட்டது. இதற்கிடையில் விசுவ நாதசுவாமி கோவி லில் ஏற்கெனவே உள்ள யோக நரசிம்மர், விநாயகர், நடனம் ஆடும் கிருஷ்ணர், நடனம் ஆடும் சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற கோலத்தில் உள்ள விஷ்ணு ஆகிய 6 சிலைகள் உண்மையான சிலைகளாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை விசாரித்தனர். விசார ணையில் அந்த 6 சிலைகளும் போலி யானவை என்பதும், உண்மையான சிலைகள் திருடுபோய் இருப்பதும் தெரிய வந்தது. இந்த 6 சிலைகளில் யோக நரசிம்மர், விநாயகர் ஆகிய 2 சிலைகள் அமெ ரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கண்டறிந்தனர். ஆக திருடுபோன 9 சிலைகளில், 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சி யகத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புக் காவலர்கள் கூறினார்கள். மீதம் உள்ள 4 சிலை களும் அமெரிக்காவில்தான் உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


ஒன்றிய நிதியமைச்சரின் அபாய அறிவிப்பு

இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம்

புதுடில்லி,அக்.14 -  இந்தியப் பொருளா தாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், வரும் காலத்தில் நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட வும் கூட வாய்ப்பிருப்பதாகவும் ஒன்றிய  அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அபாயச் சங்கு ஊதியுள்ளார். அய்ந்து நாள் அரசுமுறை பயண மாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பன்னாட்டு நிதி ஆணையம் மற்றும் உலக வங்கி ஆண்டு கூட்டத் தில் பங்கேற்க உள்ளார். மேலும், ‘ஜி -  20’ நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர் களுடன் பேச்சுவார்த்தை, அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர், ஜப்பான், சவூதி  அரேபியா, தென் கொரியா, ஆஸ்தி ரேலியா நாடுகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை போன்ற நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். 

முன்னதாக அமெரிக்கா சென்ற டைந்த நிர்மலா சீதாராமன், அமெரிக்க நிதித்துறை செயலாளர் எலானை சந்தித்து இந்தியாவில் நடைபெறவுள்ள அமெரிக்க - இந்திய பொ ருளாதார சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, வாசிங்டன் புரூக்கிங்ஸ்  நிறுவனத்தில், “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” எனும் தலைப்பிலும் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது, “வரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளவுள்ள முக்கிய பிரச்சினைகளில் முதன்மையாக இருப்பது, எரிசக்தியின் விலை மற்றும் அதனை பெறுவதில் உள்ள சிக்கல், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவற்றை பெறுவதில்  ஏற்படும் சிக்கல்தான்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், “நாட்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப் புள்ளது” என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

“பொது முதலீடு, தென்மேற்கு பருவ மழை, திறன் பயன்பாட்டில் முன்னேற் றம், வலுவான கார்ப்பரேட் இருப்பு நிலைகள், உற்சாகமான நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை மற்றும் குறைந்து வரும் அச்சுறுத் தல், திறன் பயன்பாட்டில் முன்னேற்றம் ஆகியவற்றின் மூலமாக இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உருவாக்கி பொருளாதாரத்தைக் கட்டமைத்து வருகிறது. அதேபோல், பல துறைகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய செயல்பாட்டு அளவைத் தாண்டி விட்டது, தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனவும் பேசியுள்ளார்.


No comments:

Post a Comment