பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் - தெர்மோகிராம் பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் - தெர்மோகிராம் பரிசோதனை

திருச்சி, அக். 29- மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை (பிங்க் - அக்டோபர்) முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமத் தின் சார்பில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார் பக புற்றுநோய் குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் 21.10.2022 அன்று காலை 10.00 மணியள வில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை தலைமை வகித்து ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கள் கேட்டு விழிப்புணர்விற்கே அடித்தளமிட்ட அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெயர் தாங்கிய இக்கல்லூரி பெண்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டு இந்நிகழ்ச்சியினை இன்றைய தினம் ஏற் பாடு செய்திருப்பதாகவும் இந் திய அளவில் மார்பக புற்றுநோ யின் தாக்கம் அதிகரித்து வருவ தாகவும், குறிப்பாக தமிழ்நாட் டில் இதன் சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் நலவாழ்வுத் துறையில் இருக்கக்கூடிய மருந் தாளுநர்கள் சமூக அக்கறை யுடன் செயல்பட்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பகுத்தறிவை விதைக்கக்கூடிய

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மய் யத்தின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவருமான மரு.த்துவர் கோவிந்தராஜ்  புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்றினார். 

அவர் தமது உரையில்: பகுத்தறிவை விதைக்கக்கூடிய பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்று வதில் தாம் மிகுந்த மகிழ்ச்சி யடைவதாகவும், இக்கல்லூரி தான் விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் தலைசிறந்த சமுதாய பணியை செவ்வனே செய்து வருவதா கவும் கூறினார். மேலும் முன் னாளில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முதலிடத்தில் இருந்தது. தற் போது அவ்விடத்தை மார்பக புற்றுநோய் ஆக்கிரமித்துள் ளது. 

மூடநம்பிக்கைகள் மிகப்பெரிய சவால்!

மூடம்பிக்கைகள் புற்று நோய் சிகிச்சையினை மேற் கொள்ள மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக் கின்றன பாவத்தாலும் சாபத் தாலும் புற்றுநோய் வருவதாக கருதி பரிசோதனைகளை தவிர்ப்பதனால் நோய் முற்றிய நிலையிலையே மருத்துவமனையினை நாடுகின்றனர். எல்லாம் விதிப்படியே நிகழும் என்ற எண்ண ஓட்டங்களால் நோய் குணமாகும் என்ற தன்னம்பிக் கையை இழந்து சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காமல் இறப் பினை சந்திக்கின்றனர் என்றும் கூறினார். 18 வயதிற்கு மேற் பட்ட பெண்கள் மாதவிடாய் முடிந்த அய்ந்தாம் நாள் மார் பகங்களை சுயபரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்து வரை அணுகி தெர்மோகிராம், மேமோகிராம் பரிசோதனை களை செய்து கொண்டால் நிச்சயம் ஆரம்பநிலையிலேயே நோயினை கண்டறிந்து குணப் படுத்தலாம்.

அச்சமடையத் தேவையில்லை

மார்பில் வலியில்லாத கட்டி, அளவு மாறுபடுதல், மார்பக காம்புகளில் திரவம் வடிதல், உள்வாங்குதல் போன் றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மார்பில் வருகின்ற அனைத்து கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகளாக இருக்கும் என்று அச்சமடையத் தேவையில்லை. நோய் மட்டுமல்லாது அனைத்து பிரச்சினைகளுக்கும் நான்கு வழிமுறைகளை பின்பற்றினால் தீர்வுகள் பெறலாம். பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்தல், அதற்கான காரணம், சரி செய் தலுக்கான வழிமுறைகளை தேடுதல், பிரச்சினைகளை சரி செய்தல். இதனை பின்பற்றி னாலே நாம் எத்தகைய இடர்ப் பாடுகளில் இருந்தாலும் அதற் கான சரியான தீர்வுகளை பெற்று விட முடியும். மருந்தியல் துறை யில் ஏற்பட்டுள்ள அபரிமித மான வளர்ச்சியினால் தான் இன்று புற்றுநோய்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை வழங்கமுடிகிறது. 

புதிய கண்டுபிடிப்புகள்

இங்கு பயிலக்கூடிய மாண வர்கள் புற்றுநோய் துறையில் மேலும் புதிய புதிய கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தி புற்று நோயில்லாத சமுதாயம் உரு வாகப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் பேராசிரியர் முனைவர் அமு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் பணி மருத்துவர் யாமினி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச் சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெய லெட்சுமி வரவேற்புரையாற் றினார். பெரியார் நலவாழ்வு சங்கத்தின் இணைச்செயலர் திருமதி அ. ஷமீம் நன்றியுரை யாற்ற நிகழ்ச்சி இனிதே நிறை வுற்றது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரியார் மருந்தி யல் கல்லூரியின் பேராசிரி யர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பெண் பணியா ளர்கள் மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவிக ளுக்கு மார்பக புற்றுநோய் பரி சோதனை மற்றும் தெர்மோ கிராம் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 33 பேர் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

No comments:

Post a Comment