கருநாடகத்திற்கு வருபவர்கள் கன்னடம் கற்கவேண்டும் : அமைச்சர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

கருநாடகத்திற்கு வருபவர்கள் கன்னடம் கற்கவேண்டும் : அமைச்சர் வலியுறுத்தல்

பெங்களூரு, அக்.10 பிற மாநிலத்தில் இருந்து உள்ளூருக்கு வருபவர்கள் கன்னட மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்று கருநாடக மாநில அமைச்சர் அஸ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.

 கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா கருநாடகமாநிலம் மல்லேஸ்வரத்தில்  நடைபெற்றது. இதில் கருநாடகமாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- கருநாடகத்தில் கேரள மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். அவர்கள் திறன் மிக்கவர்கள், தொடர்ந்து கற்றலில் ஆர்வம் உள்ளவர்கள்.

 பெங்களூரு மலையாளிகளையும் ஆதரித்துள்ளது. அவர்கள் உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தையும் கற்று கொண்டுள்ளனர். கருநாடகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தினர் இங்குள்ள மொழி, கலாச்சாரத்தை கற்றுக் கொள்வது முக்கியம். கருநாடகம் பல்வேறு கலாச்சாரங்களை வெளிப்படையாக ஏற்கும் மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வேற்றுமைகளை கொண்டுள்ள கருநாடகத்தை ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்குகிறது. இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.


No comments:

Post a Comment