ஹிந்துத்துவ அமைப்பினரின் அத்துமீறல் : காவல்துறையினர்மீது தொடர் தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

ஹிந்துத்துவ அமைப்பினரின் அத்துமீறல் : காவல்துறையினர்மீது தொடர் தாக்குதல்

 பெங்களூரு: அக்.18 கருநாடகத்தில் 5 ஆண்டுகளில் காவல்துறை உயரதி காரிகள் உள்பட 380 காவலர்கள் மீது ஹிந்துத்துவ அமைப்பினர் உட்பட பல  தாக்குதல் நடத்தியுள்ளனர்

ஹிந்துத்துவ அமைப்பினரின் வன் முறைப்போக்கு மற்றும் அவர்களுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்ப தாலும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவதாலும், அவர்கள் செய்யும் வன்முறை மற்றும் அடாவடித்தனத்தை விசாரிக்கச் சென்ற காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 380 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர் பாக ஹிந்துத்துவ அமைப்பினர் உள்பட  3 ஆயிரத்து 489 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 கலபுரகியில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிறிமந்த் இல்லால். இவர் போதைமருந்து விற்பனை கும்பலை பிடிக்கச் சென்ற போது அவர் மீது 30 பேர் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருந்தது. தற்போது அவர் பெங் களூருவில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதே போல் சமீபத்தில் நடந்துமுடிந்த தசரா ஊர்வலத்தின் போது சிறுபான்மையினர் பகுதியில் அத்துமீறி நுழைந்ததை தடுத்து நிறுத் திய பல காவல்துறை உயரதிகாரிகள் உள்பட காவல்துறையினர் தாக்கு தலுக்கு ஆளானார்கள்

 கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2017ஆ-ம் ஆண்டு முதல் இதுவரை மாநிலத்தில் 380 காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 107 பேர் துணை ஆய்வாளர்கள், 49 பேர் உதவி ஆய்வாளர்கள், 128 பேர் காவலர்கள், 96 பேர் தலைமைக்காவலர்கள் இதில் அடங்குவர்.

 பெங்களூருவில் 138, உத்தர கன்னடாவில் 62, ஹாவேரியில் 23, மங்களூரு, பெலகாவியில் தலா 20 காவல்துறையினர்  தாக்கப்பட்டு உள் ளனர். காவல்துறையினரை தாக்கிய வழக்குகளில் உத்தர கன்னடாவில் 802 பேர், மங்களூருவில் 501 பேர், பெங்களூருவில் 493 பேர், தாவண கெரேயில் 465 பேர், கலபுரகியில் 255 பேர், மற்ற இடங்களில் 973 பேர் என 3 ஆயிரத்து 489 பேர் கைதாகி உள் ளனர். இதுகுறித்து மாநில காவல்துறை இயக்குநர் பிரவீன் சூட்  கூறியதாவது:- காவல்துறையினர் வேலை என்பது சவால் மிகுந்தது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, குற்ற நிகழ்வுகளை தடுப்பது உள்பட பல்வேறு சவாலான பணிகள் உள்ளது. நாங்கள் சூழ் நிலையை எப்படி கையாளுவது என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளித்து உள்ளோம். வன்முறை நிகழ்வுகள் ஏற்படும் நேரத்தில் தான் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்று கூறினார்

 முக்கியமாக வடமேற்கு மற்றும் கடற்கரை ஓட கருநாடகாவில் ஹிந் துத்துவ அமைப்புகள் அதிகம் வளர்ந் துள்ளது. இங்குதான் அதிக வன் முறைகள் காவல்துறையினர் மீது நடந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment