பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும்வரைக்கும் வள்ளுவம்'' நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, எழுச்சித் தமிழர் பெற்றுக்கொண்டார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும்வரைக்கும் வள்ளுவம்'' நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, எழுச்சித் தமிழர் பெற்றுக்கொண்டார்!

நூலாசிரியர் பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை

சென்னை, அக்.4- சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘வாழும்வரைக்கும் வள்ளுவம்' நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நேற்று (3.10.2022) நடைபெற்றது. நூல் வெளி யீட்டு விழாவில் மாநாடுபோல் பெருந்திரளானவர்கள் திரண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்கள் உரை போர் முழக்கமாக ஒலித்தது.


நூலாசிரியர் பேராசிரியர் .செகதீசன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்பெரியார் உலகத்திற்கு' நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான (ரூ.1,00,000) காசோலையை வழங்கினார்.

விழாவின் தொடக்கமாக இசைக்கலைஞர் சுகனேஸ்வரன் ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே’ பாடலைப்பாடி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நூலாசிரியர் பேராசிரியர் அ.செகதீசன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு  செ.ஆனந்த் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வா.மு.சே.ஆண்டவர், வில்லிவாக்கம் குமரிசெழியன்  ஆகியோருக்கு சுகனேஸ்வரன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நூலாசிரியரை பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் இணைந்து பயனாடை அணிவித்து பலத்த கரவொலிகளுக்கிடையே சிறப்பு செய்தார்கள்.

இன்றைய சூழலில் வருணாசிரமம், சனாதன தர்மத்தை தூக்கி நிறுத்த, மக்களிடையே விஷ வித்துவாக பரப்ப, ஆரிய சூழ்ச்சியுடன் அதிகார ஆணவத்துடன் திணிக்கும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டு வருவதை சிறப்பு விருந்தினர்கள் உரையில் எடுத்துரைத்து எச்சரித்தனர்.

வருணாசிரம நச்சுக்கு பெரு மருந்தாக தந்தை பெரியார் கொள்கைகளும், வள்ளுவமுமே பெரும் அரணாக திகழ்கின்றன என்பதை விளக்கிப் பேசினார்கள். மேலும், தமிழ் இனம் மானத்துடன் வாழவும், அடிமைத்தளைகளிலிருந்து மீட்சி பெற்று மேன்மையுற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலே உள்ளது என்றும் எடுத்துக் கூறினார்கள்.

தூத்துக்குடி வ.உ.சி. பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘வாழும் வரைக்கும் வள்ளுவம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூலை வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டு எழுச்சிரை ஆற்றினார்.

சேலம் அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் சுப்பிரமணி, பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் , உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கத்தின் தலைவர் வில்லிவாக்கம் கவிமாமணி முனைவர் குமரிசெழியன், சமூக ஆர்வலர் ‘தோழமை’ தேவநேயன்  உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்கள்.

நூலைப்பெற்றுக்கொண்ட எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்துரையில் சனாதனத்துக்கு எதிராக, வருணாசிரமத்துக்கு எதிராக போர் முழக்கமிட்டு சிறப்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரை நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் உலகத்துக்கு நூலாசிரியர் பேராசிரியர் அ.ஜெகதீசன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலக நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஏற்புரையாற்றினார்.

தென்காசி வட்டாட்சியர் (விருப்ப ஓய்வு) ஆரியூர் செ.திருமாமணி நன்றி கூறினார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். 

நன்றியுரை ஆற்றிய செ.திருமாமணி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழாவில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் பலரும் பங்கேற்றனர்.

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, சேந்தநாடு, ஆரியூர், வழுதரெட்டி, வேடம்பட்டு பகுதிகளிலிருந்து பேருந்து, வேன், மகிழுந்துகளில் வந்து, திரளாக விழாவில் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக  துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், பெரு.இளங்கோ, இளைஞரணி சோ.சுரேஷ், பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், மாணவர் கழகம் தொண்டறம் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், விழிகள் வேணுகோபால், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், புலவர் வெற்றியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், செயலாளர் பரணிதரன், விழுப்புரம் மண்டல செயலாளர் தா.இளம்பரிதி, வழக்குரைஞர் தா.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, கீதா கோபண்ணா, கீ.கோ.இலக்கியா, மாவட்ட துணை செயலாளர் நல்லாப்பாளையம் இரமேஷ், இளைஞரணி பழனிவேல், விழுப்புரம் கொ.பூங்கான், பகவான்தாஸ், சதீஷ்,எத்தீஸ்ட், செல்வக்குமார், அஜய், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, பழங்குடி அமைப்பின் நிறுவனத் தலைவர் சுடரொளி என்.சுந்தரம், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் செந்தில்வேலன், கம்மந்தூர் அண்ணாமலை, திண்டிவனம் மாவட்டத் தலைவர் அன்பழகன், நவா.ஏழுமலை, பரந்தாமன், பாவேந்தன், மருத்துவர் க.வீரமுத்து, பாவேந்தன், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், பாசுகர் மற்றும் ஆரியூர் தனசேகர், குருநாதன், கவிதா, முருகன், மணி, சுந்தரம் உள்பட பலரும் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment