பிஜேபிக்கு தேர்தல் நிதி - அள்ளிக் கொடுத்த அறக்கட்டளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

பிஜேபிக்கு தேர்தல் நிதி - அள்ளிக் கொடுத்த அறக்கட்டளை

புதுடில்லி,அக்.21 பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.464.81 கோடி நன்கொடையை புரூ டென்ட்  அறக்கட்டளை வழங்கி யுள்ளது. பல்வேறு நிறு வனங்கள், அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெற்று வருகின்றன. அவ்வாறு கட்சிகளுக்கு நிதியை புரூ டென்ட் தேர்தல் அறக்கட்டளை வழங் கியுள்ளது. இந்த அறக்கட் டளை உள்பட மொத்தம் 5 தேர் தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-_2022ஆம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை நன்கொடை யாக வழங்கி உள்ளன.

இதில் 72 விழுக்காடு நிதியை பாஜக பெற்றுள்ளது. காங்கி ரசுக்கு 3.8 விழுக்காடு நிதி வழங் கப்பட்டுள்ளது. இதில் பாஜக வுக்கு ரூ.336 கோடியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா ரூ.16 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 26 தவணைகளாக இந்த ரூ.336 கோடி வழங்கப்பட் டுள்ளது. 2020-_2021ஆம் ஆண் டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன் கொடைகளை வழங்கி உள்ளன. இதில் பாஜக ரூ.215.5 கோடி(82 விழுக்காடும்), காங்கிரஸ் கட்சி ரூ.5.4 கோடியை(2.1 விழுக்காடும்) நிதியாக பெற்றுள்ளது..

2021_-2022ஆம் ஆண்டில் காங்கிரசை விட மாநில கட்சி களுக்கு அதிக நிதி வழங்கப்பட் டுள்ளது. டில்லி  மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை நிதியாக பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் தேர்தல் அறக்கட் டளை ரூ.16.3 கோடியும், இன்டி பென்டன்ட் தேர்தல் அறக்கட் டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளன. புரூடென்ட் அறக்கட்ட ளையிடம் இருந்து டிஆர்எஸ் கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.27 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கி ரசுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது. கோவா பார்வர்ட் கட்சிக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதியாகக் கிடைத்துள்ளது.

இதில் புரூடென்ட் அறக் கட்டளைக்கு கோவிஷீல்ட் தடுப் பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ரூ.45 கோடியை வழங்கியுள்ளது. ஹெட்டெரோ டிரக்ஸ், ஹெட் டெரோ லேப்ஸ் நிறுவனம் தலா ரூ.5 கோடியை, புரூடென்டுக்கு வழங்கியுள்ளது. மேலும் டோரண்ட் பார்மா நிறுவனம் ரூ.2 கோடியை, புரூடென்டுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவ னங்கள் ரூ.52.5 கோடியை தேர்தல் நிதியாக புரூடென்டுக்கு வழங்கி யுள்ளன. ஆர்செலார் மிட்டல் டிசைன் அன்ட் இன்ஜினீயரிங் சென்டர் நிறுவனம், ஆர்செலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து புரூடென்ட் அறக்கட்டளைக்கு ரூ.130 கோடியை தேர்தல் நிதியாக வழங்கியுள்ளன.

பல்வேறு நிறுவனங்களிட மிருந்து பெற்ற நிதியைக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை புரூடென்ட் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பாஜகவுக்கு 26 தவணைகளாக ரூ.336 கோடியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி களுக்கு தலா ரூ.16 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment