கம்போடியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களைக் கோருகிறது - தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

கம்போடியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களைக் கோருகிறது - தமிழ்நாடு அரசு

சென்னை, அக்.10  அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அழைத்துச் செல்கின்றனர்.  ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், இணையம் மூலமாக சட்டவிரோதமான செயல்களை செய்ய வலியுறுத்த ப்படுகின்றனர். அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் மூலமாக  தாய்லாந்தில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.  தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று செய்தி வரப்பெற்றதை தொடர்ந்து, அங்கு உள்ள தமிழ் இளை ஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளது. மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வர வேண்டிய நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும் நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை  91-9600023645, 91-8760248625, 044-28515288 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும்  சட்ட விரோதமான முறையில் இளை ஞர்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment