ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு நாட்டிற்கு மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் நரேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு நாட்டிற்கு மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் நரேஷ்

 புதுடில்லி. அக்.19 ஹிந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத் துவப் படிப்பை ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா 16.10.2022 அன்று தொடங்கி வைத்தார்.  நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு தொடங்கப்பட் டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  வெளியிட்டார். ஆனால் ஹிந்தியில் மருத்துவப் படிப்பு என்பது பாதகமான விளைவு களை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுண ருமான டாக்டர் நரேஷ் புரோ கித் கருத்து தெரிவித்துள்ளார். 

ஹிந்தி எம்.பி.பி.எஸ். படிப் பினால் என்ன பாதகம் என்று அவர் கூறும் தகவல்கள்:- 

* இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இத்தகைய பின் னணி கொணட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வருவார்கள். தமிழ்நாடு, கேரளா என தென் மாநில மாண வர்கள் ஹிந்தியில் சரளமான பேச்சுத்திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தும். 

* எம்.பி.பி.எஸ். என்பது அடிப்படை பட்டப்படிப்பு அல்ல. உயிராபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட் டும் மருத்துவர்கள் பணியாற்ற முடியாது. அவர்கள் பிற வாய்ப்பு களையும் தேட விரும்புவார்கள். ஹிந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ முடியாது. 

* உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத் துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை மருத்துவர் கள் பின்பற்ற வேண்டும். அவை ஆங்கிலத்தில்தான் உள்ளன. 

* வெறும் எம்.பி.பி.எஸ்._சுடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த உடனேயோ, பின் னரோ அவர்கள் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள் மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment