வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் சார்பில் 75ஆவது மாதந்திர சிறப்புக் கூட்டம் காந்தியார் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வாக 2.10.2022 அன்று மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
தோழர் முகிலன் "காம்ரேட் புத்தா" எனும் நூலினை அறிமுகம் செய்து பேசினார். வடக்குத்து தர்மலிங்கம், திராவிடன் டிஜிட்டல் ராமநாதன், உதயசங்கர், செந்தில் வேல், சத்தியா, குணசுந்தரி, கலைச்செல்வி, டேனியல், திரைப்பட துறை இயக்குனர் ராம் பெரியசாமி, ஒன்றிய தலைவர் கனகராஜ், நூலகர் கண்ணன், மறுவாய் சேகர், மோகன் ஆகியோர் பேசினர் முடிவில் அசோக் நன்றி கூறினார்

No comments:
Post a Comment