காங்கிரஸ் தலைவர் தேர்தல் : தமிழ்நாட்டில் 659 வாக்குகள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : தமிழ்நாட்டில் 659 வாக்குகள் பதிவு

சென்னை,அக்.18- இந்திய தேசிய காங் கிரஸ் தலைவர் தேர் தலில் தமிழ்நாடு அளவில் சென்னையில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 659 வாக்குகள் பதிவாகின. இந்திய தேசிய காங்கிரஸ் தலை வர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் களான கருநாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட் டில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 711 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு கியூஆர் கோடு உடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்கப்பட்டது. தேர்தலில் வாக்களிப்பதற்காக பல் வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் 16.10.2022 அன்று சென்னைக்கு வந்துவிட் டனர். அவர்கள் ஓட்டல்களில் தங்குவ தற்கு கார்கே அணியை சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்பின ரும், சசிதரூர் அணியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் தரப்பினரும் ஏற்பாடு செய்தனர். வாக்குப் பதிவுக்காக டில்லியில் இருந்து 4 பிரத்யேக வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட் டுகள், வாக்காளர் பட்டியல்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஆகி யவை வாக்குப் பதிவு நடைபெறும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு 16.10.2022 அன்று கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் வாக்குப் பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநில காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொருளாளர் ரூபி மனோகர், மேனாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்க பாலு, சு.திருநா வுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல் வப்பெருந் தகை உள்ளிட்ட பலர் வாக் களித்தனர். உடல்நலக் குறை வால் குமரி அனந்தன் வாக் களிக்க வரவில்லை. தேர்தல் பணிக்காக வெளி மாநி லங்களுக்கு சென்றுள்ள 

ப.சிதம்பரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அந்தந்த மாநிலங் களில் வாக்களித்தனர். நேற்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சென்னையில் மொத்தம் 659 வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவ லகத்தில் தேர்தல் அதிகாரி ஹிபி ஈடன் எம்.பி. முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. 29 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்தனர். 


No comments:

Post a Comment