சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர் மட்ட சாலை : 2024இல் நிறைவேறும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர் மட்ட சாலை : 2024இல் நிறைவேறும்

புதுடில்லி,அக்.4- சென்னை துறைமுகம் - _ மதுரவாயல் இடையே ரூ.5,800 கோடியில் 20.56 கி.மீ. நீளத்துக்கு 4 வழிப் பாதையாக உயர்மட்ட விரைவு சாலை அமைக் கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று ஒன்றிய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்துக்கு சரக்கு களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் கடும் போக் குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. அத்துடன் கால தாமதமும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சரக்கு வாகனங்கள் செல்ல வசதியாக, சென்னை துறை முகத்தில் இருந்து மதுரவாயலுக்கு உயர்மட்ட விரைவு சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2006_-2011) முடிவு செய்யப்பட்டது. இதற்கான அர சாணை 2008இல் பிறப்பிக்கப் பட்டது. கூவம் ஆறு மற்றும் தேசிய நெடுஞ்சாலை (என்எச்-4) மீது 19 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச் சாலையாக அமைக்க திட்டமிடப் பட்டது. சாலைக் கான திட்ட செலவு, நிலம் கையகப் படுத்துதல் (ரூ.310 கோடி) உட்பட ரூ.1,655 கோடி என மதிப்பிடப்பட்டது.

கடந்த 2009 ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதை யடுத்து, பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக் கப்பட்டன. 2013இல் இத்திட் டத்தை முடிக்க திட்டமிடப் பட்டது. இந்நிலையில், 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இருப்பதாக கூறி இத்திட்டத்துக்கு தடை விதித்தது.

இந்நிலையில், 2021இல் மீண் டும் ஆட்சிக்கு வந்த திமுக, இத் திட்டத்தை சிறு சிறு திருத்தங் களுடன் செயல்படுத்த முடிவு செய்தது. இதன்படி, ‘‘சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான உயர்மட்ட விரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று நடப்பு 2022-_2023 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதற்கு ஒன்றிய அரசும் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத் துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டினார்.

திருத்தம் செய்யப்பட்ட திட் டத்தின்படி, 20.56 கி.மீ. தூரத்துக்கு உயர் மட்ட சாலைஅமையும். ஏற்கெனவே 6 வழிச் சாலையாக அமைக்க திட்ட மிடப்பட்ட நிலையில், இப்போது 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதில் துறைமுகம் முதல் கோயம்பேடு வரையில் 2 அடுக்கு சாலை அமைய உள்ளது. இதில் கீழ் அடுக்கில் இருசக்கர வாக னங்கள், கார் உள்ளிட்டவையும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்களும் செல்லும். இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில், தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந் திய கடற்படை இடையே கடந்த மே மாதம் கையெழுத்தானது. இதன்படி, ரூ.5,855 கோடி செலவில் 20.56 கி.மீ. நீளத்துக்கு உயர்மட்ட விரைவு சாலை அமைக்கப் படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்பணிகளை மேற் கொள்ள உள்ளது.

இத்திட்டம் குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (3.10.2022) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

புதிய இந்தியாவில் பல்நோக்கு சாலை இணைப்பு வசதியை வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் படி, தமிழ்நாட்டின் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட சாலை திட்டம் சுமார் ரூ.5,800 கோடி மதிப்பில் செயல் படுத்தப்படுகிறது. 20.56 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலை 4 வழிப் பாதையாக இருக் கும். சென்னை துறைமுகத்தின் உட்புறத்தில் தொடங் கும் இந்த சாலை மதுரவாயலில் முடிவ டையும். இத்திட்டம் வரும் 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும்.

சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்காக பிரத் யேகமாக இந்த சாலை கட்ட மைக்கப்படுகிறது. இதன்மூலம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதி கரிக்கும். இதுபோல, துறைமுகங்களில் வாகனங்கள் காத்திருப்பது 6 மணி நேரம் வரை குறையும். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நாட்டின் பொருளா தாரத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்கட்ட மைப்பு மேம் பாட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment