தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாளில் படக்கதை விளக்கத்துடன் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி டிவிட்டரில் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாளில் படக்கதை விளக்கத்துடன் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி டிவிட்டரில் பதிவு

சென்னை,அக்.1- தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாளில் திமுக மகளிரணி செயலாளர் நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி தம்முடைய டிவிட்டர் பதிவில் தந்தைபெரியார் ஆற்றிய பணிகளில் சுயமரியாதை, சம உரிமை, பெண் விடுதலை, சமூகநீதி ஆகியவற்றை தலைப்பிட்டு படக்கதை விளக்கத்துடன் அவர் பதிவில் சுயமரியாதையையும், சமூகநீதியையும் வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி நாள் இன்று. பகுத்தறிவே மானுடத்தின் அடிப்படை மாண்பெனப் போதித்த அந்தப் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றிட உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment