முதலமைச்சருக்கு "அட்வைஸ்" கூறும் "பூணூல் மலரே!" பதில் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

முதலமைச்சருக்கு "அட்வைஸ்" கூறும் "பூணூல் மலரே!" பதில் என்ன?

‘‘ஊசிமிளகாய்''

‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அநீதி உணர்வோய் போற்றி!

எம் இனம் கெடுத்தோய் போற்றி!

.....'' என்று ‘ஆரிய மாயை'பற்றி அறிஞர் அண்ணா எழுதிய கவிதையின் ஒரு பகுதி இது!

இன்று (11.9.2022) "பூணூல் மலர்" புளுகு ஏட்டில் ஆசிரியர் புனை பெயரில் எழுதும் புரட்டுக் கடிதப் பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு ‘‘புத்திமதி'' இலவசமாக வழங்கியுள்ளார்கள், இந்தப் ‘‘பிரகஸ்பதிகள்!''

‘அண்ணாதுரைக்கு ஸ்டாலின் துரோகம்!' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது அந்த ஆசிரியர் கடிதம். அண்ணா என்று எழுதமாட்டார்கள், பெரியார் என்று எழுத மாட்டார்கள் - அது பண்பும், நாகரிகமும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே உள்ள அம்சம்; வந்தேறிக் கூட்டத்திற்கு அது வருமா? வராது!

அறிஞர் அண்ணா, பெரியார் கொள்கையை ஆட்சிக்கு வந்ததும் பின்பற்றவில்லையாம்; கலைஞர்தான் பலவிதமாகப் பின்பற்றினாராம்! அதுபோல, ‘‘நீங்கள்'' அண்ணாதுரை வழியை விட்டு ஏன் கருணாநிதி வழியில் ஆட்சி செய்கிறீர்கள்? அது அண்ணா(துரை)வுக்கு செய்யும் துரோகம் என்று நாக்கூசாமல் புரட்டை அவிழ்த்துவிட்டு, தங்கள் அறிவு விசாலத்தை வெளிச்சம் போட்டுக் கொள்வதுடன், பிரித்தாளும் பார்ப்பன பூணூல் தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது ‘தினமலர்!'

அட ஆரிய விஷக் கிருமிகளே, அண்ணா ஆட்சி அமைக்குமுன்பே ஆளுநர் மாளிகைக்கா சென்றார்?

200 மைலுக்கு அப்பால் உள்ள திருச்சி பெரியார் மாளிகைக்கு அல்லவா கலைஞருடன் சென்று, ‘ஆசி' பெற்றார்.

அதை ஏன் மறந்தீர் அல்லது மறைத்திருக்கிறீர்கள்?

அது மட்டுமா?

தோழர் முனுஆதியின் கேள்விக்குச் சட்டமன்றத்தில் பதிலளிக்கையில் முதலமைச்சர் அண்ணா,

‘‘தந்தை பெரியாருக்கு தியாகி மானியம் ஏன்? இந்த அமைச்சரவையே அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று'' என்று கூறி, ஆச்சாரியார் உள்பட உங்கள் பூணூல் கூட்டத்தை வியர்வைத் தொட்டியில் தள்ளி மகிழ்ந்தாரே, மறந்துவிட்டதா?

பதவிக்கு வந்தவுடன் அரசு அலுவலகங்களில் கடவுளர், கடவுளச்சி படங்களை அப்புறப்படுத்திட சுற்றறிக்கை அனுப்பி, பெரியார் பாராட்டைப் பெற்றாரே, அது மறந்துவிட்டதா?

சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றம்

தமிழ்நாடு பெயர் மாற்றம்

இருமொழிக் கொள்கைச் சட்டம் இயற்றி ஹிந்திக்கு இடமில்லை.

தி.மு.க.வில் ஒரே ஒரு பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர் உண்டா? 

- என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறி, இன்றளவும் செயல்படும் நிலையை மறைத்து எழுதினால், உங்கள் புத்திக் கோளாறு என்றுதானே பொருள்?

‘‘நான் இருக்கும் இடத்தில் பெரியார் இருப்பார்; பெரியார் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்'' என்று பகிரங்கமாகப் பேசி, பிரகடனம் செய்தாரே, அந்தப் பேச்சுக்குப் பொருள் புரியவில்லையா?

இந்த சிண்டு முடியும் சில்லறைத்தனங்கள்தானே  உங்கள் அடையாளம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக ‘‘திராவிட மாடல்'' ஆட்சியை நடத்துகிறார்!

இந்தப் பருப்பு அவரிடம் வேகாது! வேகவே வேகாது!

ஏன் வீண் கனவு?

No comments:

Post a Comment