பொறியியல் மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கான திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

பொறியியல் மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கான திட்டம்

சென்னை, செப்.26 இளம் பொறியியல் பட்டதாரி களுக்கு ஆசியாவில் பணியாற்ற பயணம் புரிவதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவ தற்காகவும் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பன்னாட்டு இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் குறித்து தேசிய கருத்தரங்கை நடத்தியது.

காமன்வெல்த் பொதுச் செயலாளரால், ஆசியாவுக்கான காமன்வெல்த் சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்ட ஆடாசி யஸ் ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் செயல் இயக்குநரும் மற்றும் காமன்வெல்த் இணைய செயல்பாட்டாளர் விருது பெற்ற தினேஷ் கஜேந்திரன், பல்வேறு பன்னாட்டு வாய்ப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கில் எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறை இளம் தொழில் வல்லுநர்களாக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறோம் என இப்பல்கலைக் கழக வேந்தர், டாக்டர் என்.எம். வீரைய்யன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment