உயிர்நீத்த இராணுவ வீரருக்கு விருது - அஞ்சல்மூலம் அனுப்பி அவமதிப்பதா? ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்ப முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

உயிர்நீத்த இராணுவ வீரருக்கு விருது - அஞ்சல்மூலம் அனுப்பி அவமதிப்பதா? ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்ப முடிவு

புதுடில்லி,ப்.10- இராணுவத்தில் பணியாற்றும்போது உயிர்நீத்த இராணுவ வீரருக்கு அவர் மறைவுக் குப்பின்னர், அவர் வீட்டுக்கு அஞ்சலில் விருதை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. இச்செயல் நாட் டுக்காக உயிர்நீத்த இராணுவவீரரை அவமதிப்பதாக உள்ளது என்று அவ்விருதினை ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்ப உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பொறுப்பில் பணியாற்றியவர் கோபால் சிங். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு பயங்கரவாதி களுடனான துப்பாக்கிச் சண் டையின் போது உயிரிழந்தார்.

அவரது வீரமரணத்திற்காக ராணுவம் இவருக்கு ‘சவுர்யா சக்ரா’ என்ற உயரிய ராணுவ விருதை அறிவித்துள்ளது. மேலும், அந்த விருதை சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ராணுவம் அஞ்சலில் அனுப்பியுள் ளது.

ராணுவத்தின் இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ராணுவம் அஞ்சலில் அனுப்பிய அந்த விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த விருதை ராணுவத்திடம் திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்துள் ளனர்.

இது தொடர்பாக பேசிய ராணுவ வீரரின் தந்தை முனிம் சிங், எனது மகனுக்கு அளிக்கப்பட்ட விருது குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் நாட்டின் குடியரசுத் தலைவர் கொடுக்க வேண்டிய விருது. அவ்வாறு செய்யமுடியவில்லை என்றால் , மூத்த ராணுவ அதி காரிகள் ராணுவ வீரரின் குடும்பத் திடம் விருதை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் செய்யாமல் அஞ்சலில் அனுப்பியுள்ளனர். இதனால் அந்த விருதை திருப்பி கொடுக்க விருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

விருதை ராணுவம் அஞ்சலில் அனுப்பி இருக்கக் கூடாது. இது ராணுவ வழக்கத்தை மீறிய செயல் மட்டுமல்ல, ராணுவ வீரரின் வீர மரணத்தையும், அவரது குடும்பத் தையும் அவமதிக்கும் செயலாகும் என இணையவாசிகளும் விமர் சித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment