மிதக்கும் துர்க்கை "கடவுளர்" சிலைகளின் காட்சிப் பதிவுப் பகிர்வு ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்துகிறதாம் : எச்சரிக்கும் காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

மிதக்கும் துர்க்கை "கடவுளர்" சிலைகளின் காட்சிப் பதிவுப் பகிர்வு ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்துகிறதாம் : எச்சரிக்கும் காவல்துறை

 மும்பை, செப்.29 துர்க்கா பூஜைக்குப் பிறகு நீர்நிலைகளில் பாதி மூழ்கிய அல்லது மிதக்கும் கடவுளர் சிலைகளின் ஒளிப் படங்கள் மற் றும் காட்சி பதிவுகளை எடுக்கவோ, பரப்பவோ அல்லது வெளியிடவோ கூடாது என மும்பை காவல் துறை எச்சரித்துள்ளது. 

செப்டம்பர் 26-ஆம் தேதி மும்பை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், துர்கா பூசைக்குப் பின்னர், நீர் நிலைகளில் சிலைகளைக்  கரைப்பது வழக்கம். அப்போது பாதி கரைந்த மற்றும் பாதி மூழ்கிய துர்க்கா கடவுளர் சிலைகளை ஒளிப்படம், காட்சிப் பதிவு எடுக்கவும், பகிரவும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அவ்வாறு செய்வது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதால், இதனால் ஏற்படும் சிக்கல்களையும், பிரச் சினைகளையும் தவிர்க்கவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மும்பை காவல் துறை சார்பில் அறிவிக்கப்படுள்ளது. 

மேலும், இது குறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது: பாதி மூழ்கிய, சரியாக கரையாத, துர்கா கடவுளர் சிலைகளை புகைப்படம் எடுப் பதோ, காட்சிப் பதிவு எடுப்பதோ அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதோ கூடாது. அதேபோல், மாநகராட்சி பணியாளர்கள், பாதி கரைந்த சிலைகளை எடுத்து மீண்டும் கரைக்க எடுத்துச் செல் வதையும் ஒளிப்படம் எடுக்கக் கூடாது.  இவ்வாறு செய் வதால், மத உணர்வுகள் புண்படுத் தப்பட்டு, சமூக அமைதிக்கும் குந்தகம் ஏற்படாமல் இருக்கவே இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எனவும் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு பகிர்ந்து அதனால் ஏற்படும் பிரச் சினைகளைத் தீர்க்க 144 தடை உத் தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும். எனவே அப்படியான அசாதாரண சூழல் ஏற்படாதவாறு பொதுமக்கள்  ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல், காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உத்தரவை மீறுப வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களின் அலைபேசி பறிமுதல் செய்யப்பட லாம், அல்லது தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் காவல் துறை தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு குறித்து பொது இடங்களில்,  வாகனங்களில் ஒலிப் பெருக்கியால்  மும்பை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல் இந்த தடை உத்தரவானது, அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை அமலில் இருக்கும் எனவும் காவல் துறை தரப்பில்  கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment