தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு: "தகுதி- திறமை" பேசும் "முகத்தில் பிறந்தவர்" இவர்கள்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு: "தகுதி- திறமை" பேசும் "முகத்தில் பிறந்தவர்" இவர்கள்தான்!

சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

புதுடில்லி, செப். 12- தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) பணியாளர்களின் தொலைப்பேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்ட வழக்கில், என் எஸ்இ மேனாள் நிர்வாக இயக்குநர்கள் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண், மும்பை மேனாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே உள்ளிட்டோர் மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அம லாக்கத் துறை கடந்த 9.9.2022 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை என்எஸ்இ நிர்வாக இயக்குந ராகவும், தலைமை செயல் அதிகாரி யாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். அப்போது என்எஸ்இ அதி காரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச்சந்தைத் தரகர்கள் முறை கேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படு கிறது.

இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங் குச்சந்தைத் தரகர்கள் தொடர்பு கொண்டு பங்கு விவரங்களை முன் கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடு பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த முறைகேடு வாயிலாக பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படு கிறது.

இதுதொடர்பாக சிபிஅய் வழக்குப் பதிவு செய்து கடந்த மார்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய் தது. இந்த வழக்கில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்பு என்எஸ்இ நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் ரவி நாராயண் பதவி வகித்தார். அவரின் பணிக் காலத் தில் மும்பை மேனாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயின் அய்செக் சர்வீசஸ் நிறுவனம் என்எஸ்இயில் 2010-ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத் தணிக்கைகளில் ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது. 

அவ்வேளையில், கோ-லொகேஷன் வசதி மூலம் முறைகேடு நடைபெற்ற தாகவும், என்எஸ்இ பணியாளர்களின் தொலைப்பேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப் பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படு கிறது. இந்தக் குற்றச் சாட்டுடன் தொடர்புள்ள பணமோசடி வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை மேனாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோரை கடந்த ஜூலை மாதமும், ரவி நாராயணை கடந்த செவ்வாய்க்கிழமையும் அமலாக் கத் துறை கைது செய்தது. அவர்கள் மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக் கத் துறை கடந்த 9.9.2022 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவர்கள் உள்பட என்எஸ்இயின் மூத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக தொலைப்பேசி களை ஒட்டுக்கேட்க அய்செக் சர்வீசஸ் நிறுவனத்தை அனுமதித்ததாக அம லாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

அதன் மூலம் என்எஸ்இக்கு அந்த அதிகாரிகள் நிதி இழப்பை ஏற்படுத் தியதாகவும் அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், ‘சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் மற்றும் என்எஸ்இயின் இதர மூத்த அதிகாரிகள் உதவியுடன் அய்செக் சர்வீசஸ் நிறுவனம் சட்ட விரோதமாக செயல்பட்டு ரூ.4.54 கோடி ஈட்டியுள்ளது. அதனை முறை யாக சம்பாதித்தாகவும் அந்த நிறுவனம் கணக்குக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது’ என்று தெரிவித்து உள்ளது.

பார்ப்பன உயர்ஜாதியினர் எதற் கெடுத்தாலும் தகுதி, திறமை என்று கூறுவது இதுபோன்ற மோசடிகள், முறைகேடுகள் தொடர வேண்டும் என்பதற்காகத்தானா? என்கிற கேள்வி எழுவதில் வியப்பேதுமில்லை.

No comments:

Post a Comment