கருவிழிப்பதிவு அடிப்படையில் ரேசன் பொருள்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

கருவிழிப்பதிவு அடிப்படையில் ரேசன் பொருள்கள்

சென்னை,செப்.30- கருவிழிப்பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட் களை வழங்கும் திட்டம் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிலவற்றில் சோதனை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2.15 கோடிக்கும் அதிக மான குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்கப்படு கின்றன. பொது விநியோகம் கணினிமயமாக் கப்பட்ட பின், ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக, விரல்ரேகை பதிவு சரி பார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின் றன. இதில் விரல் ரேகை பதிவு சரி பார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதைப் பலமுறை சரி செய்த போதும் சிக்கல் தொடர்கிறது.

ஏற்கெனவே ஸ்மார்ட் குடும்ப அட்டை யுடன் ஆதார் இணைப்பு இருப்பதால், கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் கருவிழி அடிப்படையில் பொருள் களை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெ டுத்துள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தமிழ் நாட்டில் சில நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில் பொருள்களை வழங்கும் முறை தொடங்கப்படும். இது சாத் தியப்பட்டால் அனைத்து கடைகளிலும் கரு விழிப்பதிவு அடிப் படையில் பொருட்களை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment