ஆன்லைன் ரம்மிக்கு தடை: அமைச்சரவை ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

ஆன்லைன் ரம்மிக்கு தடை: அமைச்சரவை ஒப்புதல்

சென்னை, செப்.27- சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நேற்று (26.9.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள் ளிட்ட இணையதள சூதாட்ட விளை யாட்டுகளை தடை செய்வதற்கான அவ சர சட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பிறப் பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு உருவாக்கி யுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆக.29 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்ற தகவல் தெரி விக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நேற்று (26.9.2022) காலை நடந்தது. இதில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, பொதுத் துறை செயலாளர் ஜெகந்நாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலர் பணீந் திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 10 ஆம் தேதி அறிவித்தபடி, இணையவழி சூதாட் டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசுக்கு அறிவுரை வழங்க, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை முதலமைச் சரிடம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி சமர்ப்பித்தது.

பிறகு, மாணவர்களிடம் இணையதள விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக் கம்பற்றி பள்ளிக்கல்வித் துறை நடத்திய கணக்கெடுப்பு, மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்து பகிர்வோரிடம் நடத்தப்பட்ட ஆலோ சனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படை யில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆக.28 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்போது கூறியபடி, மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப் படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட முழு வடி விலான அவசர சட்டம் தற்போது அமைச்சரவை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு ஆளு நரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment