திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை, செப். 29-  ‘கடந்த 2021  ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, திருமணம் ஆகாத பெண் களும் கருக்கலைப்பு செய்யலாம்,’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில் லியைச் சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண் கருவுற்றார். கருவைக் கலைக்க, அப்பெண் முடிவு செய்தார். ஆனால், கரு 24 வாரங்கள் ஆனதால், சட்டரீதியான பிரச்சினை எழுந்தது. இதனால், கருவைக் கலைப்பதற்கு அனுமதி கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந் தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் அந்தப் பெண் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் போபண்ணா அமர்வில் நேற்று (28.9.2022) வழக்கை விசாரித்து, ‘கருக் கலைப்பு சட்டத்தில் 2021 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை டில்லி உயர்நீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதியில், ‘கணவர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘துணை’ என்ற வார்த்தை மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருமண மாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம். இருப்பினும், மனுதாரரை எய்ம்ஸ் மருத்துவக் குழு உடல்நீதியாக பரி சோதனை செய்து, சான்றிதழ் வழங்கினால் கருக்கலைப்பு செய்ய எந்தத் தடையும் இல்லை,’ என உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment