குளிர்பானம் தொண்டையை எவ்வாறு பாதிக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

குளிர்பானம் தொண்டையை எவ்வாறு பாதிக்கிறது?

குளிர்ந்த தண்ணீர் அல்லது பழச்சாறு பருகும்போது தொண்டை வலி, இருமல், சளி ஏற்படுவது ஏன் எனத் தெரிந்து கொண்டால் பல வித உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். இதுகுறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம்.

நமது தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் மீது கவசம் போல ஒரு லேயர் இருக்கும்/ இதன் பெயர் ரெஸ்பிரேட்டரி மியூகோஸா. மியோகோஸா தொண்டையில் பாக்டீரியாத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் திரவம். எப்போதும் தொண்டையை உலராமல் ஈரப் பதத்துடன் வைத்திருக்க இது உதவுகிறது.

நமது உடலில் ஈரமான இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். நாம் உண்ணும் உணவு, திரவங்கள் உள்ளிட்டவை தொண்டையில் மியூகோஸா வைத் தாண்டியே உணவுக்குழாய்க்குச் செல்லும். அதீத குளிர்ச்சி கொண்ட ஐஸ் கிரீம், அய்ஸ் தண்ணீர், பழச்சாறு, கார்பனேடட் பானங்கள் உள்ளிட்டவை மியூகோஸாவை சுருங்கச் செய்யும்.

மியூகோஸா எல்லை இதனால் தொண் டைப் பகுதியில் தற்காலிகமாகக் குறைகிறது. இந்த நேரத்தில் காற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் தொண்டையில் ஒவ்வா மையை ஏற்படுத்துகின்றன. இதனால் தொண்டை வலி, வீக்கம் உண்டாகிறது. தொண்டையின் ஈரப்பதம் குறைவதால் வறட்டு இருமல் ஏற்படும். வோகல் கார்டு பாதிக்கப்படுவதால் தொண்டை கட்டும் போது குரலில் மாறுதல் ஏற்படும்.

இதனைத் தடுக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளிர்ச்சியான பானங் கள், உணவு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் குளிர்ச்சி அதிக நேரம் தொண்டையில் நீடிக்காது. எனவே மியூகோஸா பாதுகாக்கப்படும். சாப்பாட்டுக் குப் பின்னர் உடனடியாக குளிர் பானங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது தொண்டைக்கு அதிக பாதிப்பை உண்டாக் கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க நாம் குளிர்பானங்களை அருந்துவோம். ஒரு நாளில் அடிக்கடி குளிர் பானங்களை அருந் துவது மியூகோஸா லேயருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மியூகோஸா சுரப்பு அளவும் குறையும். தாகம் தீர்க்க வெறும் நீர், மோர், இளநீர் அருந்துவது நல்லது. 

No comments:

Post a Comment