தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு,மேளதாளம் முழங்க பட ஊர்வலம், கொடியேற்றி சிறப்பு விருந்துடன் கொண்டாட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு,மேளதாளம் முழங்க பட ஊர்வலம், கொடியேற்றி சிறப்பு விருந்துடன் கொண்டாட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

தருமபுரி செப். 15- தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.9.2022 அன்று மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் வீ.சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் வரவேற்றார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.வேட்டராயன்,க.கதிர், மண்டல ஆசிரியரணி அமைப்பா ளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.   மண் டல மாணவர் கழக செயலாளர் சமரசம் கடவுள் மறுப்பு கூற மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன், மாணவர் கழகத்  துணை செயலாளர் மா.செல்லதுரை, நகர தலைவர் கரு.பாலன், விடுதலை  வாசகர் வட்டத் தலைவர் க.சின்ன ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், ஆகியோர் கருத்துரையாற்றினார்.

மண்டல தலைவர் அ.தமிழ்ச் செல்வன் தொடக்க உரையாற்றி னார்.

இறுதியாக கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களை செயல்படுத்துவது குறித்து எடுத்துக்கூறி  சிறப்புரையாற்றினார்.

இரங்கல் தீர்மானம்: 

திண்டுக்கல் மாவட்டம் சின்னா ளபட்டி முதுபெரும் பெரியார் தொண்டரும், கிராமங்கள் முதல் நகரம் வரை  50 ஆண்டு காலமாக இயக்க பிரச்சாரக் கூட்டங்களில் இயக்க ஏடுகளை கையிலேந்தி  பொதுமக்களிடம் எடுத்து பரப் புரை செய்த மணி என்கின்ற சுப்பிர மணி அவர்களின் மறைவுக்கு  மாவட்ட திராவிடர் கழகம் வீர வணக்கத்தை செலுத்துகிறது.

தீர்மானம் 2:

 6-9-2022 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத் தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்துவது என தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் 3: 

தந்தை பெரியர் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் சிறப்பாக  கழகக் கொடியை ஏற்று வது, உறுதிமொழி எடுப்பது, இனிப்பு வழங்குவது, படத்திற்கு மாலை அணிவிப்பது, ஊர்வலம் நடத்துவது,  சிறப்பு விருந்துடன் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 

எண்பத்தி எட்டு ஆண்டுகால விடுதலை ஏட்டின் வரலாற்றில் 60 ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றி உலக சாதனை புரிந்த நமது ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டி வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5. 

தமிழர் தலைவரின் 60 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியின் அடையாளமாக 60 ஆயிரம் சந்தா வழங்கும் நிகழ்வில்  முதல் கட்ட மாக சந்தா அளித்த அத்தனை தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாவினை டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்த நாளன்று வழங்குவது என்ன தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 

தருமபுரி மாவட்டம் கடத்தூ ரில் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக சொற்பொழி வாளர் சே.மெ.மதிவதனி ஆகியோரை அழைத்து சிறப்பான வகையில் பொதுக்கூட்டத்தை நடத்துவ தென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7: 

தருமபுரி மாவட்டம் பாலக் கோடு ஒன்றியம் பாடி செக்கோடி பெரியார் சமத்துவபுரம் என்னும் பெயர்ப் பலகைக்கு பதிலாக வெறுமையாக சமத்துவபுரம் என்று மட்டுமே உள்ளது. எனவே அவற்றை திருத்தி பெரியார் சமத் துவபுரம் என எழுதுமாறும்,   இது வரை பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை இல்லாமல் இருக் கிறது. எனவே  சமத்துவபுரத்தில் பெரியார் சிலை உள்ளதுபோல் பாடி சமத்துவபுரத்திலும் பெரியார் சிலையை  உடனே அமைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரை மாவட்ட திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8: 

மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்களை வருகின்ற காலங்களில் மற்ற பகுதிகளில் விரிவாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் ப. பெரியார், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா. சுதா, வேப்பிலைப்பட்டி மாணவர் கழக தலைவர் அரிகரன்,  மேனாள் மாவட்ட தலைவர் இ.மாதன், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ஆசிரியர் சுந்தரம், மேனாள்  இளை ஞரணி தலைவர்  காமலாபுரம் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment